பகுத்தறிவு

Vinkmag ad

பகுத்தறிவு.

நல்லவை, அல்லவை பகுத்தறிந்து,
அல்லவை நீக்கி நல்லவை கொண்டு
நல்லதோர் வாழ்வு நயம்பட வாழ்தலே,
 நல்லோர் உரைத்த பகுத்தறிவாகும்.
 சுயநலம் கொண்ட நயவஞ்சகர்கள் ,
பகுத்தறிவை ஒரு கருவியாக்கி
சாதி,இனம், மதம் ,மொழி என
மக்களைப்பிரித்து ,தங்கள்
பிழைப்பிற்கான வழியாக்கினரே.
மற்றவர் கோயில் சென்றால்  ,அதை
மூட நம்பிக்கையென்பார் ,- தன்
குடும்பத்தார் செல்வதவர்
சுதந்திரம் என்றிடுவார் .
அவரவர் மனைவியர்க்கு ,முறைப்படி
தாலியைக் கட்டிடுவார் –
தொண்டர்தம் மனைவியரின்  தாலி
அறுத்திடும் நிகழ்ச்சி வைப்பார் .
ஈசன் இல்லையென்பார்  -ஆனால்
யேசுவைக் கடவுளென்பார் .
அல்லாஹ்வை ஏற்றிடுவார் -இந்துக்
கடவுளைத் தூற்றிடுவார் .
இந்துப்பண்டிகைகள் எனில் -அதை
ஏளனம் செய்திடுவார் .-ஆனால்
கிறிஸ்துமஸ், ரம்ஜான் எனில்
களிப்புடன் வாழ்த்துரைப்பார் .
பாவை நோண்புதனை – அவர்
பழித்துப் பேசிடுவார்  -ஆனால்
ரமலான் நோன்பினுக்கு -சென்று
கஞ்சிகுடித்திடுவார்
ஆலயம் வேண்டாமென்பார் -அறங்
காவலர் பதவி கேட்பார் .
பூசைகள் கூடாதென்பார் -ஆனால்
பூசாரி பதவி கேட்பார் .
ஆண்டவன் சிலைக்கு மாலை போட்டால் -அதனை
மூடநம்பிக்கையென்பார் .
மாண்டவன் சிலைக்கு மாலைபோட்டு -அங்கு
மண்டியிட்டு வணங்கிடுவார் .
சிறுபான்மையினரைத் தங்கள்
சிரசினில் ஏற்றிவைப்பார் .
பெரும்பான்மையினரிடம் -ஓட்டுப்
பிச்சைக்கு வந்து நிற்பார் – இந்த
மனப்பாண்மை புரியாமல் – மக்கள்
மடையராய் வாக்களிப்பார் .
பணத்திற்காகவும் , பதவிக்காகவும்
போடுவார் பலகோஷம் ,
சுயநலத்திற்காகவும் , பிழைப்பிற்காகவும்
போடுவார்  வெளிவேஷம் .
.
மற்றவர் உழைப்பினில் வாழாது ,
மற்றவர் உடைமையைப்  பறிக்காது ,
மற்றவர் உரிமையை நசுக்காது ,
மற்றவர் உணர்வினைப் பழிக்காது ,
மாண்புடன் வாழ்வதே பகுத்தறிவு .
மற்றவையெல்லாம் சிற்றறிவு.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

News

Read Previous

அவதூறு

Read Next

விருந்தாய் அமையும் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *