நெடுஞ்சாலைப் பயணம்

Vinkmag ad

 

நெடுஞ்சாலைப் பயணம் 
கடைசி வரிசைக்கு வாழ்க்கைப்பட்டு விட்டவர்களை 
முறத்தில் வைத்துப் புடைப்பது மாதிரி 
குலுக்கிப் போட்டு 
எடுத்துப் போகும் வேகப்  பேருந்து 
 
டயர்  சீட்காரர் 
அவ்வப்பொழுது போய் 
முன்னிருக்கையில் முட்டி மோதி 
தேய்த்துக் கொள்வார் வலிக்கும் நெற்றியை 
உறக்கம் கலையாமலே 
 
சன்னலோரப் பயணி 
வண்டிக்கு வெளியே 
சிதறி விழப் பார்க்கும் 
உடம்பின் பாகங்களை மீட்டெடுத்துக் கொள்வார் 
டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் பூனை மாதிரி 
 
ஓடிக் கொண்டிருந்த திரைப்படம் 
நிறுத்தப்பட்ட நேரம் கூடத் தெரியாத 
பாட்டியம்மா 
புருவத்தை நெரித்து 
யாரையோ தேடிய பார்வையிலேயே 
அவரறியாமல் தடுக்கி வீழ்வார் 
அடுத்த கட்ட தூக்கத்திற்குள் 
 
நித்திரை அருள் வந்து ஆடும் சாமியாடிகள் 
வரிசைகள் தோறும் 
கொலுவாய் வேறு உலகத்தில் இருக்க 
 
முன்புற கண்ணாடிக்கு வெளியே 
மையிருட்டில் மழைத் தூறல் மாதிரி 
சிதறும் வாகன விளக்குகளின் 
வெளிச்ச இழையோட்டத்தில் விரியும் 
நம்பிக்கையற்ற நீண்ட நெடிய வெளியில் 
யாரையோ துரத்திய படியும் 
யாரிடமிருந்தோ தப்பியவாறும் 
இரைச்சலோடு விரையும் பேருந்தில் 
 
ஒட்டுநருக்குப் பின் இருக்கையில் 
உறக்கம் வராத இந்தப் பேய் இரவில் 
உயிரைக் கையில் பிடித்தபடி நான்.
 
 
– எஸ் வி வேணுகோபாலன் 
 
நன்றி: ஆனந்த விகடன் (சொல்வனம்)

News

Read Previous

மாகொல் பகைமுகத்த வெள்வேலான் என்பவன் யார்?

Read Next

மார்ச் 23, ஷார்ஜாவில் ரத்ததான முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *