நாயகம் எங்கள் தாயகம்

Vinkmag ad
நாயகம் எங்கள் தாயகம்
–வலம்புரிஜான்
 
7.  அன்னை மடியில் அண்ணல் !
 
 
(பக்கம் 110-113)
 
 
நம்பிக்கை –
சொர்க்க உலகத்தின்
சுனை நீர் ஊற்று …
பிரளயம் பிறந்தபோதெல்லாம்
வற்றிவிட்டது நீர் என்று
செய்தி வாசித்த வானவில் !
காற்றில் ஆடும் தீபங்கள்
அணைந்துவிடாமல் …
கைத்தலமாகிக் காப்பாற்றுகிற
சதைத் தாமரை !
நம்பிக்கை இல்லாத
இல்லங்களில் …
மனைவிகள் எல்லாம்
விலை மகளிர் !
நம்பிக்கை இல்லாத
மருத்துவ மனைகளில் …
மருத்துவர்கள் எல்லாம்
கொலைகாரர்கள் !
நம்பிக்கை இல்லாத
வங்கிகளில்…
காசாளர்களெல்லாம்
கொள்ளைக்காரர்கள் !
நம்பிக்கை தீபத்தம்பம்
நலிந்து கிடக்கிறது !
வெட்டி அதை
விறகாக்குவதற்காக
வௌவால்கள்
புறப்பட்டு விட்டன …
வேப்பமரம்
நோயிலே கிடக்கிறது –
வைத்தியனோ
பாயிலே கிடக்கிறான் !
காவல் காக்கிற அய்யனாரோ
தன்னைக்
களவு செய்தவர்களிடம் …
கண்களையாவது தந்துவிடுமாறு
கதறி வேண்டுகிறார்.
நம்பிக்கை சிதைந்துவருகிற
நாட்களில் …
நாயகத்தை நினைக்கிறோம்
‘அல் அமீன்’ ‘அல் அமீன்’
அவர் –
‘அல் அமீன்’ மாத்திரம்
அல்லர்
‘அஸ்ஸாதிக்’ (உண்மை உரைப்பவர்)
அந்த நாள் மக்காவில்
கண்ணுக்குள் வைத்துக்
காப்பாற்ற இயலாத
பொருளுக்கெல்லாம்
பாதுகாப்பு பெட்டகம்
நாயகம் அவர்களே !
மூத்தோர் முகம்மது
முறைப்படி எங்கும்
படித்திடவில்லை.
பல்கலைக் கழகம் எங்காவது
பாடம் பயில பள்ளிக்கு வருமா?
பட்டாணிக் கடலையைப்
பார்த்துப் பார்த்து
உலக உருண்டை எங்காவது
உடுத்திக் கொள்ளுமா?
[தொடரும் . . . ]
___________________________________________________

News

Read Previous

கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!

Read Next

அறம் பாடுதல்

Leave a Reply

Your email address will not be published.