நல்வாழ்த்து நான் சொல்வேன்

Vinkmag ad
நல்வாழ்த்து நான் சொல்வேன்
=====================================================ருத்ரா
நல்வாழ்த்து என்ற‌
ஒலியில்
நாவும் ஒலிக்கிறது.
உளமும் ஒலிக்கிறது.
வாழ்த்து எனும் நல் அன்பை
(அது என்ன நல் அன்பு என்று
வம்புக்காக அம்புகள் தொடரா என‌
நம்புகிறேன்)
அந்த உள்ளம் உணர்வு எனும்
கலப்பை கொண்டு
ஆழ உழுவதாக எடுத்துக்கொள்வது தானே
நயத்தக்க நாகரிகம்.
இதில்
இலக்கணக்குறிப்பும் தொல்காப்பியரும்
இன்னும் சீவகசிந்தாமணியும் வேண்டும்
என்று
வழக்காடுவதில்
என்ன நோக்கம் இருக்கிறது என்று
தெரியவில்லை.
தமிழை தமிழ் என்று ஒலிப்பது கூட‌
இந்த தமிழ்மண்ணுக்கு
ஒரு அயல் உணர்வு ஆகிவிடும் அளவுக்கு
கோவில்களின் வழியே
ஒரு கூச்சலின் புகைமூட்டம்
கவிந்துகொண்டிருக்கும்
ஒரு வரலாற்றுப்பக்கம் தான் இங்கு
இன்னும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கீழடிக்கும் கீழே கீழே…இன்னும் கீழே
தொண்டியெடுத்துக் கொடுத்தாலும்
தமிழின் தொன்மைக்குரல்
கேட்கப்படாத செவிகளே இங்கு அதிகம்.
இதில்
“நல்வாழ்த்துக்கள்” கூட‌
கொச்சைப்படல் ஆகுமா?

News

Read Previous

சொல்லக் கொதிக்குதுடா நெஞ்சம்

Read Next

செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *