நட்பு

Vinkmag ad

நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு

 

உதிரப்பட்ட வார்த்தைகளில், உதவி நீட்டுவதல்ல நட்பு,
வார்த்தைகள் உதிருமுன், உதவிகரம் நீட்டுவதே நட்பு.

 

தீமைகளுக்கு தீணியாய் இருப்பதல்ல நட்பு,
தீமைகளை,தீயிட்டு அழிப்பதே நட்பு.

 

பொருள்தரா, இணைந்திருக்கும் இரட்டை கிளவியாய்,இருப்பதல்ல நட்பு,
இணைந்தாலும்,பிரிந்தாலும் பொருள்தரும்,அடுக்குத்தொடராய் இருப்பது நட்பு.

 

கலவரங்களுக்கு, கருவாய் இருப்பதல்ல நட்பு,
அதனை, கருவிலேயே கருகலைப்பு செய்வதே நட்பு.

 

அநீதிக்கு அடிக்கோடாய் இருப்பதல்ல நட்பு,
நியாயத்திற்கு நிழலாய் இருப்பதே நட்பு .

 

A.H.யாசிர்ஹசனி லால்பேட்டை,

அபுதாபி.

 

தொடர்புக்கு : 0556258851

 

 

News

Read Previous

இஞ்சிப் பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

Read Next

வெளிப்படை விஞ்ஞானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *