நட்பு மட்டும் ஒன்றே

Vinkmag ad

நட்பு மட்டும் ஒன்றே
———————————
ஏற்றிவிடும் ஏணிக்கும்
ஏதுவாய் சாய்ந்து கொள்ள
சுவரொன்று இல்லை எனில்
சுமையை சும்ப்பதும் கடினம்

கடல் மிதக்கும் கப்பலுக்கு
கடக்கும் வழி சொல்ல
காற்று ஒன்று இல்லை எனில்
கரை சேர்வதும் கடினம்

நீராவிகள் கருக்கொள்ள
நீலவான முகிழ் இல்லை எனில்
வான்மழை வறண்ட பூமியில்
வந்து பொழிவதும் கடினம்

பறவைகள் பறந்து செல்ல
புவியீர்ப்பு இல்லை எனில்
சிறகுகள் இருந்தும் சிரம்ம்
சிகரம் தொடுவதும் கடினம்

தேனைத் தேடிவரும் தேனீக்கள்
தேன் வடியும் மலர்கள் கண்டு
மனமுவந்து மகரந்தம் தராவிடில்
மலர்கள் காய்ப்பதும் கடினம்

இவ்வுலகம் சுழல்வதற்கு
இருதுருவமாய் பிறந்த
இரண்டினம் இல்லை எனில்
இனப்பெருக்கமும் கடினம்

உற்றார் சுற்றார் சூழ
உறவுகள் பலர் இருந்தும்
உயிர் நண்பர் இல்லை எனில்
உள்ளம் மகிழ்வதும் கடினம்

ஒன்றை ஒன்று சார்ந்து
இரண்டாய் எல்லாம் படைத்த
இறைவன் நட்பை மட்டும்
ஒன்றாய்ப் படைத்த தேனோ
இணை அதற்கு இல்லை என்பதாலோ

கவின்முகில் மு முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

ஆவை அன்சாரி தகப்பனார் வஃபாத்து

Read Next

யாவரும் “கேளீர்”!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *