தேடல்

Vinkmag ad
தேடல்
=====================================ருத்ரா
இந்த சொல்
களிம்பேறிய நம்
சிந்தனைப்பாத்திரத்தை
புளி போட்டு விளக்குகிறது.
பசியெடுத்த வயிறு
உணவைத்தேடுவது போல்
ந‌ம்
உள்ளுணர்வுக்கும்
சிறுகுடலைத்தின்னும்
ஒரு பெருங்குடல்
இருப்பதாக நினைக்க வேண்டும்.
வாழ்க்கையின்
தீர்வு என்ன?
ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்குவார்
இஸ் ஈகுவல் டு
ஏ ஸ்குவேர் ப்ளஸ் டுஏபி ப்ளஸ் பி ஸ்குவேர்
என்று சொல்லிவிட்டு
அந்த புத்தகத்தை டப்பென்று
மூடிவிடுவதா?
அப்படியென்றால்
இன்று செவ்வாய் கோளுக்கு
உலா சென்று வர‌
கொரோனாக்கள்
நம் உயிர்களை கொத்து கொத்தாக‌
கொள்ளையடித்த போதும்
அந்த டிக்கட்டுகளையும்
புக் செய்ய‌
நாம் கியூவில் நிற்கத் தயார்.
அட!
அதே வீச்சில்
அந்த “பிரம்மத்தை” நினை.
அந்த “பிரம்மமாகவே ஆகி விடு”
என்கிறார்களே
இதற்கு உன் தீர்வு என்ன?
அதற்கும் ஒரு வர்ம் ஹோல்”
என்ற புழுக்கூட்டு “யோகா”
இருக்கிறது?
என்ன பதஞ்சலியின் தாடிக்குள்
போயா
ஹிக்ஸ் போஸானை தேடுகிறீர்கள்?
சரி தான்.
தேடல் ஒரு வழியாய் இருத்தது போய்
ஏதோ ஒரு சதுப்புக்காட்டின்
குட்டைக்குள் விழுந்தது போல்
ஆகி விட்டது.
சாஸ்திரங்களோடு
பிஹெச்டி வாங்கியவன்
அதோ ஜோல்னாப்பையோடு போகின்றான்.
இந்த கொரோனாவோடு “கிருமி போஜனத்தை”யும்
கலந்து
ஒரு தீசிஸ் தயாரிக்க அலைகின்றான்.
தேடல் இனியும்
ஒரு தேடல் நோக்கித்தான்
பயணிக்க வேண்டும்!
_____________________________________________

 

News

Read Previous

எதிர்கொள்ள….

Read Next

கிடைத்த ஓய்வு வீண்போகலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *