தூத்துக்குடி உணர்த்தும் பாடம்

Vinkmag ad
தூத்துக்குடி  உணர்த்தும் பாடம் 
 
ஆலை  துவங்கியது தவறல்ல அம்மக்களுக்கு  
வேலை வழங்கியதும் தவறல்ல , விஷமியர்கள் .
அறவழிப் போராட்டம் என்றுகூறி அரைவழியில் 
மறவழியாய் மாற்றியதே மாபெரும் தவரன்றோ . 
 
நன்முறையில் நடந்ததனை  சுயலாபத்திற்காக  
வன்முறையாய் மாற்றியது யார் செய்த சதியாலே    
பொதுமக்கள் உடைமைகளை எரித்ததுவும் ,அழித்ததுவும் 
பொதுச் சொத்துக்கு சேதம் விழைத்ததுவும்  துன்மதியாலே  .
 
தூத்துக்குடி மட்டுமின்றி , தமிழகம் முழுவதுமே 
தொழிற்சாலை நடத்திடவே அஞ்சுகிறார் அனைவருமே .
வேலை கொடுக்கும் ஆலைகளை மூடச் செய்வார் 
வேலையில்லாத்  திண்டாட்டம் பெருகியதென்றரற்றிடுவார்.   
 
வார்டு மெம்பெர், கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர்கள் 
ஆளும்கட்சி ,எதிர்க்கட்சி , உதிரிக்கட்சிகள் மற்றும் 
அரசு ஊழியர் முதல் அதிகார வர்க்கம் வரை 
கையூட்டுப் பெறுவத்திலே  , கைகோர்த்து நிற்கின்றார் .
 
மக்களுக்குப் பணம் கொடுத்து , மூளைச்சலவை செய்து 
போராட்டம் தூண்டிவிட்டு , பிண்ணணிக்குச் சென்றிடுவார் .
 அப்பாவி மக்களோடு , அக்கிரமக்காரர் கலந்து  
அராஜகம் செய்துவிட்டு  , திரை மறைவில் பதுங்கிடுவார் 
சூழ்ச்சி அறியாத  , சூதுவாதற்ற மக்கள்  
இன்னல்கள் அனுபவித்து , இன்னுயிரும் நீந்திடுவார் . 
 
அமைதியைக் குலைத்து , ஆட்சியைக் கவிழ்த்திடவே 
அரசியல் நோக்கத்துடன் ஆர்பாட்டம் நடத்துவோரை  
அடையாளம் கண்டு மக்கள் அண்டவிடாது செய்துவிட்டால் 
துப்பாக்கியை எதிர்நோக்கும் , துர்பாக்கியம் மறைந்துவிடும். 
 
 
 
அன்புடன் ,
சேது சுப்ரமணியம் 

News

Read Previous

ஒக்கூர் மாசாத்தியார்

Read Next

முகநூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *