துணிவு

Vinkmag ad

துணிவு
=======

அறிவும் ஆற்றலும் இயைந்தது துணிவு
வீரமும் விவேகமும் நிறைந்தது துணிவு
கொண்ட கொள்கையில் நேர்மை துணிவு
பிறர்குற்றம் பொறுத்து மன்னிப்பது துணிவு
திமிரில்லா முனைப்பும் நலம்நல்கு துணிவு
வறுமையிலும் வாய்மைநிலை தவறா துணிவு
எதுவரினும் எவர்தடுத்தும் தீதுநாடா துணிவு!

இல்லார்க்கு ஈதலும்
தீதுகண்டு வெகுதலும்
கற்றோரைமதித்தலும்
கயவர்நட்பு வெறுத்தலும்
இரப்போர்க்கு ஈதலும்
குலப்பெருமை காத்தலும்
அடுத்து வாழுதலும்
கொடுத்து மகிழ்தலும்
தடங்கல்கள் தகர்த்து
வெற்றித்தடம் பதிப்பதும்
தரணியில் தலைமை
தவருகண்டு வெகுதலும்
நடுநிலை நடத்தலும்
வஞ்சகம் மனதறுத்தலும்
அஞ்சாது வாழ்தலும் துணிவே!

மானம் காக்கும் துணிவு
மடமை அகற்றும் துணிவு
காசுபொருள் காட்டிடினும்
கயமை வெறுக்கும் துணிவு
பகைமை கண்டு பாய்தல்
பகைவர் பணிந்தால் பொறுத்தல்
மகளிர் மாண்பு காத்தல்
மானம் காக்கும் குறிக்கோள்
ஈனமில்லா செயல்கள்
வறுமையிலும் வாய்மை
புகழ்ச்சியிலும் பொறுமை
இவையாவும் துணிவே!

வானவர் போற்றும் வாழ்நெறியும்
வஞ்சகர் குலமறு மாமறவும்
நேர்வழி மாறா நிறைவாழ்வும்
ஓர்வழி வான்மறை மனதிருத்தி
உய்தல் உயர்தல் பெருந்துணிவே!

“கொடுகவயலார்”
ஏ. பாலசுப்பிரமணியபாண்டியன்
N-173 ருவைஸ் நகரியம், அபுதாபி.
நாள்: 26.06.2015, வெள்ளிக்கிழமை.

News

Read Previous

சென்னை நண்பன் இதழ்

Read Next

வெள்ளி மேடை என்ற நூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *