தாலாட்டு

Vinkmag ad

கீழக்கரை வள்ளல் மாமணி

அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் – அல்ஹாஜ்ஜா முத்து சுலைஹா

ஆகியோரின் பேத்தி

ஜனாப் பி.எஸ்.ஏ. ஆரிப் புஹாரி – நிலோஃபர்

தம்பதிகளின் குலம் தழைக்க வந்த கோமேதகம்

வள்ளல் வழிச் செல்வி ஆயிஷாவுக்கு

                           தாலாட்டு

இராகம் : நீலாம்பரி

 

‘குன்’னென்ற சொல்லின் குறிப்பால் கொடையளக்கும்

பென்னம் பெரியோனின் பேரருளால் வந்துதித்த

அன்புக்(கு)கரசி ஆயிஷா தாலேலோ !

அன்னை நிலோஃபரின் ஆருயிரே தாலேலோ !

 

 

வண்டலூர் பிறைப்பள்ளி

வரலாற்றில் புகழ் அள்ளிக்

கொண்டுவரும் அந்தக்

கொள்கைப் பாசறைதான்

தந்து (உ) வந்த தங்கமுன்

தந்தை (ஆரிப் புஹாரி

சிந்தையெலாம் இனிக்கின்ற

செங்கரும்பே தாலேலோ !

 

 

தென்காயல் முத்தொளியே !

தேனொழுகும் மாங்கனியே !

மண்காயப் பொறுக்காத

மனம்காயாப் பொன்மழையே !

அண்ணல்நபி அவதரித்த

அழகொளிரும் சீமையிலே

உன்வருகை பூத்ததம்மா !

ஓவியமே ! தாலேலோ !

 

 

உன் … முன்னோர் ஆலிம்கள் !

மூதறிஞர் ஞானிகளாம் !

பன்னுமா நன்மறையின்

பாதை விளக்குகளாம் !

நண்ணும் மெய்ஞ்ஞான

நாதாக்கள் வழிவந்த

இன்பப் பெருக்கே !

ஏழிசையே ! தாலேலோ !

 

 

பூதூவி யன்பாய்

புவனம் வரவேற்ற

மாமேதை ஷெய்கு

மாப்பிள்ளை லெப்பை ஆலிம்

சீலப் பரம்பரையில்

செழித்துவந்த ரோஜாவே !

நூலே ! நுண்ணறிவே

நூலகமே ! தாலேலோ !

 

 

கார்தட்டும் பஞ்ச

காலத்தும் சளைக்காமல்

மார்தட்டி ஈந்த

மால் சீதக்காதியவர்

பேர்வற்றிப் போகாமல்

பேரறம் காத்துவரும்

சீரார் கொடைமரபுச்

சித்திரமே தாலேலோ !

 

 

வானம் கைவிட்ட

வறண்ட காலத்திலும்

ஞானப்பூ குலுங்கும்

நந்தவனம் உண்டாக

ஆனவரை உன் நன்னா

அல்ஹாஜ் பி.எஸ்.ஏ

தானப் பாலூட்டுகிறார்

சந்தனமே அறிவாயோ !

 

 

பெண்ணினத்தின் சூஃபிகளும்

பெரும் ஞானப் பண்டிதரும்

தன்னகத்தே கொண்டு (உ) வக்கும்

சங்கையொளிர் கீழக்கரை !

பொன்தீனின் வாழ்வுக்குப்

புதுப்பாதை போடவந்த

தென்றல் நீ ! ஆயிஷா !

தேன் தமிழாய் வாழியவே !

அருள்ஞானப் பயிர்விளைக்கும்

 

 

‘அருஸியா தைக்கா’ வின்

நிறைஞானச் செல்வர்களாம்

நின்னுடைய முன்னோர்கள் !

மறையமுது பாற்சுவையே !

மாசில்லா மணிவிளக்கே !

நிறையெழில் தீன்போல

நீடூழி வாழியவே !

 

 

கவிஞர் மு. சண்முகம்  ( தற்போது கவிஞர் மு ஹிதாயத்துல்லா )

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி

இளையான்குடி

 

நன்றி :

தீன் தமிழ் மாத இதழ்

பிப்ரவரி 1987

News

Read Previous

வண்ணங்கள் பேசட்டும் ( பிச்சினிக்காடு இளங்கோ )

Read Next

சங்கத் தமிழ் அனைத்தும் தா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *