தாலாட்டு

Vinkmag ad

புன்சிரிப்பு பூமகனே கேளடா கண்ணே –உன்

பூர்வீகத்தை மறந்திடாது நினைந்துகொள் கண்ணே

பாபம்சேரா பாலகனே தெரிந்துகொள் கண்ணே

இருந்தநிலை மறப்பதுவே பாபமாம் கண்ணே

சிறந்தநாமம் சூட்டியுலகு அழைத்திடும் கண்ணே – அந்த

நாமமதில் உறைந்தயொன்று நீயல்ல கண்ணே

நாமரூப பேதமில்லா உயர்பொருள் கண்ணே – நீ

நாமமதில் அடங்கிடாத மறைபொருள் கண்ணே

அனுபவிக்கு யாவையுமே ஆய்ந்துபார் கண்ணே – அதில்

ஆன்மீக விளக்கங்கள் கிடைந்திடும் கண்ணே

தெளஹீதின் தெளிவில்நீ லயித்திடு கண்ணே – என்றும்

லெளஹீக வாழ்விலும்நீ ஜெயித்திடு கண்ணே

பார்ப்பதிலே பரமனையே பார்த்திடு கண்ணே – உன்

கேள்வியுணர்வு இவையணைத்தும் வேறல்ல கண்ணே

அகமியத்தை சுமந்தவர்கள் உயிரடா கண்ணே – உன்

உயிரைவிட உணர்வைவிட மேலடா கண்ணே

நல்லகமதிலே இடம்பிடிக்க அலைந்திடு கண்ணே – இந்த

ஜெகமதிலே வேறுயர்வு  ஏதடா கண்ணே

கொடும்நாற்றக் கூட்டங்களை வெறுத்திடு கண்ணே – அதை

கடும்சீற்றத்துடன் என்றும்நீ எதிர்த்திடு கண்ணே

இறையின்பகைகள் விரைவிலேயே அழிந்திடும் கண்ணே -நம்

மறையின்நாதர் புகழெங்கும் விளங்கிடும் கண்ணே

இதயத்தூதர் அகமியத்தை விளங்கிடு கண்ணே – அதில்

உதயமாகும் உண்மையில்நீ நிலைத்திடு கண்ணே

-ஜே.எம்.பாட்ஷா

எழுதியது : 2002

News

Read Previous

புகைப்பிடிப்பதால் புத்திக்கூர்மை பாதிக்கும்-ஆய்வில் தகவல்

Read Next

ஏன்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *