தாயை விலக்கும் …….

Vinkmag ad

தாயை விலக்கும் மகனை எண்ணி
தாயும் வேதனை
என் பாடல் வரிகளில்.
பாடல் மெட்டு:

” பொன்னை விரும்பும் பூமியிலே”
என்னை விலக்கல் ஏன்மகனே
உன்னை விரும்பும் தாயிவளே
உதயம் ஆன பருவம் முதலாய்
இதயம் ஆளும் ஓருயிரே!
கண்ணை விலக்கிக் காட்சியுண்டோ
என்னை விலக்க சாட்சியுண்டோ
நிதமும் பாலை அருந்திய மகனே
இதுவுன் கூலி ஆனதோ
பெற்ற வயிறும் நோவதையே
கற்ற அறிவும் கேட்கலையே
நாளை உனக்கும் பேரிடராய்
வேளை வருமே பேரனுடன்

இன்று புரியா வேதனையே
அன்று புரியும் நீதமுடன்
பணமும் போக்கும் நடத்தும் விதத்தில்
குணமும் போக்கி ஓடுவதேன்?

_பாடலாசிரியர்:
கவியன்பன் கலாம்

News

Read Previous

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை!

Read Next

சுற்றுப்புற சுத்தமும் கடவுள் பக்தியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *