தலை பிரசவம்

Vinkmag ad

என் முதல் கவிதை…..,

மன்னிக்கவும்
இது-என் தலை பிரசவம்
தடுமாறும் வார்த்தைகளின்
தலை பிரசவம்.

காரணத்தோடு
அம்மாவை அழவைத்து
காரணமில்லாமல்
அழுத – என்
முதல் அழுகை.

தவமிருந்து
பெற்ற குழந்தை,
நடவண்டியை பிடிக்க வந்த
முதல் முயற்சி.

வார்த்தைகளை
கலைத்துப் போட்டு,
பேச தெரியாத குழந்தையின்
முதல் பாட்டு.

மன்னிக்கவும்
இது-என் தலை பிரசவம்
தடுமாறும் வார்த்தைகளின்
தலை பிரசவம்.

O.R.தாஹிர் உசேன,M.Com.       தாயகம் : லால்பேட்டை       அமீரகம் : துபை
thahiror@Gmail.Com

 

 

News

Read Previous

நினைவு தினம் அனுசரிக்கத் தடை:வீடுகளில் கறுப்புக்கொடி

Read Next

வணிகப் பொருளா கல்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *