தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் கட்டுரைப்போட்டி

Vinkmag ad
தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் ஜூலை மாத போட்டிகள். இவற்றை மற்றத் தோழமைகளிடத்தும் பெருமளவில் பகிர வேண்டுகிறேன்.
போட்டி 1.

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் கட்டுரைப்போட்டி

July 17, 2015 at 3:11pm

அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.

 

திரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

போட்டி: கட்டுரைப்போட்டி

தலைப்பு :

1. தனிமனிதனாகக் காமராசர்

2. தேசியத்தலைவராகக் காமராசர்

3. நிர்வாகியாகக் காமராசர்

4. அரசியல்வாதியாகக் காமராசர்

விதிமுறை:

போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.

குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.

படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.

கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.

படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 20.08.15

படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.

படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.

பரிசு விவரம்:

முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,-தமிழ்க்குடில்.

______________

போட்டி 2

அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்.

 

உயர்திரு மறைமலை அடிகளாரின் பிறந்ததினத்தை(15 ஜூலை) முன்னிட்டு ., அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை மாறுபட்ட போட்டி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது தாங்கள் அறிந்ததே.

 

போட்டி விவரங்கள்.

 

போட்டி – சொற்பொழிவு.

 

தலைப்பு  – ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”

 

விதிமுறை – மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக பதிவு செய்து(MP3 Format ) ஒலிவடிவில் தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.  ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம்.  தங்கள் பெயர்,தொடர்பு எண், முகவரி புகைப்படம் இவற்றை மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிட வேண்டுகிறோம். 

 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் – tamilkkudil@gmail.com

 

அனுப்பவேண்டிய இறுதிநாள் – 20.08.15

 

பரிசு : முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

 

ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.

 

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

என்றென்றும் உங்களுடன்,

-தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக

காயத்ரி வைத்தியநாதன்

பொருளாளர்.

News

Read Previous

சுதந்திரப் போராட்டம்

Read Next

சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு வாழ்த்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *