தடைகளே விடைகள்!

Vinkmag ad
 

தடைகளே விடைகள்!

 

 

 

 

 

 

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

+974 66928662

 

  • தடைகளே

வாழ்க்கைக்கான

விடைகள் !

 

  • உன் உடல்    

இயற்கையில் முரண் !

அது உனக்கு

மாற்று திறன் !

 

  • முடமாக இருப்பது

பாவமல்ல !

மூடத்தனமாக இருக்கக்கூடாது !

 

 

  • உடலில்

இயலாமை இருக்கலாம் !

ஆனால்

முயலாமை இருக்கக் கூடாது !

 

  • முயல் ஆமையிடம்

முயலாமையால்

தோற்றது !

ஆமை முயல

வெற்றிப் பெற்றது !

 

  • மூணு வயது வரை

பேச முடியாத

ஐன்ஸ்டீன்

அணு விஞ்ஞானி !

 

  • கற்றலில்

இயலாமையால்

பாதிக்கப்பட்ட

அலெக்சாண்டர் கிரகாம் பெல்லால்

உலகம் பெற்றது

தொலைப்பேசி !

  • கை, கால் முடியாத

பேசவே முடியாத

ஸ்டீபன் ஹாக்கிங்!

அறிவியல் உலகம் பேசாத உண்மைகளை

வெளியிட்டார் !

“நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு

கருவி மூலம்தான்

அவர் தன் கருத்தை தந்திட்டார் !

 

  • அவரின்

இரு கால்கள் ஊனம்!

அவர் நடத்தி சென்றது

பலஸ்தீன விடுதலை பயணம் !

   அவர்தான் மாவீரர்  ஷேக் அஹ்மத் யாசீன் !

 

 

  • அவருக்கு

இரு கண்களும்

பார்வை இல்லை !

ஆனால் பெரும்பாலும்

அவரிடம் படிக்காத இஸ்லாமிய அறிஞர்களே

இருபதாம் நூற்றாண்டில் இல்லை !

அவர்தான்

அரபுலகின் பேராசிரியர் அல்லாமா அப்துல்லாஹ் இப்னு பாஸ் !

 

  • சோம்பல் மற்றும் கோழைத்தனத்தை 

     தூக்கி ஏறி வேரோடு!

இறை நம்பிக்கை ,இடை விடாத முயற்சியோடு

நீ போராடு !

 

  • இழிவு , தோல்விகள், அவமானம்

இவை முன்னேற்றப்பாதையில் ஏறும்போது

தடையாக விழும் முட்கள்!

முயற்சி ,பொறுமை நிதானம்

இவை கொண்டு ஏறுங்கள்

உங்கள் பாதையில் விழும் வெற்றியின் பூக்கள் !

News

Read Previous

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

Read Next

கொண்டாட்டம் கோலாகலம்

Leave a Reply

Your email address will not be published.