சுதந்திரம் எங்கே?

Vinkmag ad

சுதந்திரம் எங்கே?

மதத்தால் மொழியால்
மனிதனை பிரித்து
மனிதம் வெல்லுமா?
மககள் சுதந்திரம்.

ஓட்டு பொருக்கும்
உரிமை சுதந்திரம்
அடிப்படை மறுக்கும்
அதிகார சுதந்திரம்.

பட்டினி தவிப்பில்
பாமர சுதந்திரம்
சோற்றுக்கோங்கும்
சோகமும் சுதந்திரம்

நீதியின் சுதந்திரம்
நீர்த்துப் போச்சி
கூட்டு மனசாட்சி
கூடுதலாச்சி.

கல்விச் சுதந்திரம்
காசாய் போச்சி
(குடி)மகன்  சுதந்திரம்
டாஸ்மார்க் என்றாச்சி

உணவுச் சுதந்திரம்
BFபே என்றானால்
சாப்பிடும் சுதந்திரம்
ஸ்பூனால் ஏனோ!

ஆடைச் சுதந்திரம்
அழகாய் இருக்க
அரைக்குறை சுதந்திரம்
அஃரினை அன்றோ!

எழுத்தும் பேச்சும்
சுதந்திரம் என்றால்
மனதை கிழிக்கும்
ஆயுதம் எதற்கு?

அலுவலக சுதந்திரம்
அடிமைகளாக்கி,
CC கேமராக்கள்
CEO என்றாச்சி!

இலவசம் கேட்கும்
ஈனச் சுதந்திரம்,
அடிமைகள் வளர்ப்பதே
அரசின் தந்திரம்

கேட்டுக் கேட்டு
பெருவதா சுதந்திரம்?
கொடுத்துக் கொடுத்து
கெடுப்பதா சுதந்திரம்?
தருதலும் கொடுத்தலும்
சுதந்திரமென்றால்!
தானாய் கிடைக்கும்
சுதந்திரம் எப்போ???

O.R.தாஹிர் உசேன்,
தாயகம் : லால்பேட்டை
அமீரகம் : துபை
Mob : 055 8061995
Email: thahiror@Gmail.Com

News

Read Previous

எதிர்நீச்சல்

Read Next

மறக்கப்பட வேண்டியவர்களா வலிமார்களும்,ஷுஹதாக்களும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *