சுஜாதாவின் அக முக வெளிச்சம்

Vinkmag ad
சுஜாதாவின் அக முக வெளிச்சம்.
===========================================ருத்ரா
சுஜாதாவை
நாத்திகர்கள் நாத்திகராகவே
பார்க்கின்றனர்.
கடவுள் பற்றி
வேத வேதாந்தங்கள்
பாஷ்யங்கள் எல்லாம்
அவர் பேசினாலும்
பாசுரங்களின் நெய்யமுதையும் கூட‌
வழிய வழிய தந்தாலும்
கணினியின்
இதயத்துடிப்புக்குள்
அதன் கேள்வித்துடிப்புகள்
கடவுள் முகத்தின் அல்காரிதத்தை
அவருக்கு
கோடெக் அதாவது
கோடு செய்து டீகோடு செய்யும்
அந்த பிரம்மானந்தத்தை
தரவே இல்லை.
ஒன்றை இல்லை என்று சொல்லும்போது
அது இருக்கிறது என்பதை மறுப்பது
தான்
அங்கு வெளிப்படுகிறது.
ஒன்று  இருக்கிறது என்று
சொல்லும்போது
ஏன்?எங்கே? எப்படி?
என்று கேள்விகள் அரூபமாய்
எரிந்து கொண்டே இருக்கும்.
ஆத்திகர்களின்
இந்த வேள்வியில்
மிச்சமாய் இருப்பது
சந்தேகத்தின் சாம்பல் மட்டுமே.
ஒன்றுமே இல்லையே
இன்னும்
என்னத்தை இங்கே
எரித்துக்கொண்டிருப்பது?
என்ற கேள்வி மட்டுமே.
அவர் சொற்களில்
இந்த அகச்சிவப்புக் கிரணங்களின்
தேடல்
பல கோடி பல்ஸார்களையும்
குவாஸார்களையும்
தாண்டி நிற்கிறது.
அந்த “ரெட் ஷிஃப்ட்” பிரபஞ்சத்தின்
முதுகையே சொரியப்போய்விட்டதா
என்று கூட அவர் எழுதிக்காட்டியிருக்கலாம்.
பார்டிகிளா? வேவா?
என்று அந்த விளிம்பு
குவாண்ட வெறுமையில்
கூடு கட்டிக்கொண்டிருக்கிறது.
அந்தக்கழைக்கூத்தாட்டு நிலையில்
ஒரு வெண்தாடி வேந்தர்
அங்கே நின்று கொண்டிருக்கலாம்.
அது
ஈ வே ரா வா?
யாக்ஞவல்கியரா?
அவர் எழுத்துக்களுக்குள்
ஹைட் அண்ட் சீக்
விளையாடி
அதை கண்டுபிடிக்கலாம்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________

 

News

Read Previous

நடந்தாய் வாழி காவேரி !

Read Next

மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *