சீன வானொலி நேயர்கள் மன்ற கருத்தரங்கம்

Vinkmag ad

அனைத்திந்திய சீன வானொலி
நேயர்கள் மன்ற 26-வது கருத்தரங்கம்.
சென்னை பல்கலை கழகம், சென்னை. நாள்-31.01.2016

000 வாழ்த்துக் கவிதை 000

தேன்தமிழ் வானொலி   தெவிட்டாத தமிழொலி
தேமதுரக் குரலொலி  செஞ்சீன அழகொலி !
வான்வழிக் காற்றொலி  வந்திடும் சங்கொலி
வளமான சொல்லொலி  வழங்கிடும் வாழ்த்தொலி !
யான்விரும்பும் சிற்றலை  இதமான எழிலலை
எவரெஸ்ட் மாமலை  ஏறிவரும் வானலை !
நான்கேட்கா நாளிலை  நாளும்வரும் தமிழலை
நாடிவரும் சிற்றலை  நட்புறவு பேரலை !

யுவாங்சுவாங் நட்புறவு  எங்கள்நேரு நல்லுறவு
யுகம்காணும் புத்துணர்வு  பஞ்சசீல பற்றுறவு !
அவணிக்கு முன்னுறவு   ஆதாரம் பட்டுறவு
ஆழமான கூட்டுறவு  அணிசேரும் நாட்டுறவு !
பவனிவரும் காற்றுறவு  பாடிவரும் பாட்டுறவு
பல்துறை ஒத்துறவு   பார்போற்றும் ஒப்புறவு !
கவனத்தில் கருத்துறவு  காலத்தால் கனிந்துறவு
கனித்தமிழ் தந்துறவு  காதோரம் கலந்துறவு !

சிங்கார பதிப்போடு  சீனத்தமிழ் ஒலியேடு
சிறப்பான இயக்கத்தோடு  சேர்ந்தோங்கும் நேயர்க்கூடு !
மங்காத ஒளியோடு   மனமெல்லாம் மகிழ்வோடு
மணக்கின்ற மடலோடு  மலையென கடிதக்காடு !
பொங்கும் பூக்காடு  புதுமையான நிகழ்ச்சியோடு
பூரிக்கும் சீனத்தோடு   கைக்கோர்க்கும் உலகநாடு !
எங்கும் சிவப்போடு  ஏற்றமிகு முனைப்போடு
எழுச்சிமிகு திருநாடு  இணைந்தது தமிழோடு !

வாழ்த்துக்களோடு…  -கவிஞர்.கண்ணன்சேகர், 9894976159.


‘Kavisooriyan’ Haikoo idhazh,
13,Varada reddi street,
Thimiri-632512.
Vellore dist., Tamil nadu, INDIA.
cell:9698890108.

News

Read Previous

தலைகுனிவு!

Read Next

ஏன்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *