சீனாவின் பாரம்பரிய விழா

Vinkmag ad

சீனாவின் பாரம்பரிய விழாவான வசந்த விழா இன்று முதல் ஒருவார காலம்
கொண்டாடப்படுகிறது. சீனாவிலுள்ள நண்பர்களுக்கு அனுப்பியது.

அனைவருக்கும் வசந்த விழா வாழ்த்துக்கள்.

வசந்த விழா வாழ்த்து கவிதை.

செஞ்சீன நாடே சிரித்தாடி
சந்திர நாளை கொண்டாடி
நெஞ்சினில் நேசம் நிறைந்தாடி
நாளும் மங்கலம் செழித்தாடி
கொஞ்சிளம் குழந்தை மகிழ்ந்தடி
குவலயம் முழுமை கலந்தாடி
வஞ்சிளம் மங்கையர் மனமாடி
வந்திடும் வசந்தம் நடமாடி

புத்தாடை அணிந்த அழகோடு
பூக்கோல மிட்ட கரமோடு
மத்தாப்பு பட்டாசு வெடித்தாடு
மாபெரும் விழாவை நினைத்தாடு
மூத்தோர் இளையோர் உறவோடு
முகநூல் நட்பு வளர்த்தாடு
புத்தம் சரணம் சொல்லோடு
புனிதம் வரட்டும் வளமோடு

மந்தியில் ஆண்டு பிறந்திட
மங்கலம் வாழ்வில் நிலைத்திட
சிந்திடும் வேர்வை வழிந்திட
சீனத்து கொடியே சிவந்திட
வந்திடும் ஆண்டில் வாழ்த்திட
வண்ணக் காகிதம் வரைந்திட
தந்திடும் நலமே சூழ்ந்திட
வசந்த விழாவை போற்றிட

-ப.கண்ணன்சேகர்

News

Read Previous

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!

Read Next

ஊனம்

Leave a Reply

Your email address will not be published.