சாதனைச் செம்மல் ஷைகுல் மில்லத்

Vinkmag ad

சாதனைச் செம்மல் ஷைகுல் மில்லத்
கமாலுத்தீன் ஹள்ரத்
காஞ்சி அப்துல் ரவூப் பாகவி
1.   சித்தையன் கோட்டையின் சீர்மிகு செம்மல்
கமாலுத்தீன் ஹள்ரத்! எங்கள்
கமாலுத்தீன் ஹள்ரத்!  இஸ்லாம்
சத்திய மார்க்கத்தின் சாதனைச் செம்மல்
கமாலுத்தீன் ஹள்ரத்! எங்கள்
கமாலுத்தீன் ஹள்ரத்!

2.   நித்திய லோகத்தின் வாசலைத் திறந்து
காட்டிய நாதர் அவர்! திறந்து
காட்டிய நாதர் அவர்! தினம்
பத்திய வாழ்வை தவமாய் நிகழ்த்திய
பாகவி தந்தை அவர்! எங்கள்
பாகவி தந்தை அவர்! (சித்தையன் கோட்டையின்)

3.   பாக்கியாத் என்னும் பாக்கியக் கோட்டையில்
பாடம் நடத்தினரே- மார்க்கப்
பாடம் நடத்தினரே!

பிள்ளைகள் எங்கள் மறுமை சிறந்திடப்
பாடமும் எடுத்தனரே! வாழ்க்கைப்
பாடமும் எடுத்தனரே!(சித்தையன் கோட்டையின்)

4.  கோபக்கனலாய் கொதிக்கும்போது
ரௌத்திரம் பழகிடுவார் – ஹளரத்
ரௌத்திரம் பழகிடுவார்!
கோபம் தீர்ந்ததும் தென்றலைப் போலே
குளிர்ந்தே அணைத்திடுவார்! அன்பின்
மழையால்  நனைத்திடுவார்! (சித்தையன் கோட்டையின்)

5.    மாணவர் கூட்டம் கோனவர் செல்லத்
திட்டுகளால் மகிழும்! செல்லத்
திட்டுகளால் மகிழும்!
காதைப் பிடித்துத் திருகும் வேளை
பாக்கியமாய்க் கருதும்! வாழ்வின்
பாக்கியமாய் கருதும்! (சித்தையன் கோட்டையின்)

6.   நாதர் அவரது கொட்டுகள் எமக்குத்
தேனின்   சொட்டுகளாம்! இன்பத்
தேனின் சொட்டுகளாம்!
மேதை அவரது திட்டுகள் எங்கள்
உயர்வின் மொட்டுகளாம்! எங்கள்
உயர்வின் மொட்டுகளாம்! (சித்தையன் கோட்டையின்)

7.   எம் முதுகில் அவர் சாத்திய சாத்துகள்
சொர்க்கத் தட்டுகளாம் – எமக்கு
சொர்க்கத் தட்டுகளாம்!
தலையில் வாங்கிய குட்டுகள் எல்லாம்
சுவனப் பட்டுகளாம் – எமக்கு
சுவனப் பட்டுகளாம்!
(சித்தையன் கோட்டையின்)
8.   கள்ளம் கபடம் இல்லா(து) உழைத்த
கல்விக் கருவூலம்! கனிவோ
காந்தக் கடிவாளம்!

உள்ளம் எல்லாம் பரிவால்  பொங்கும்
உம்மத்தின் சொந்தம்! ஹள்ரத்
உம்மத்தின் சொந்தம் !
(சித்தையன் கோட்டையின்)
9.  பிள்ளை போன்ற உள்ளம் கொண்டவர்
இல்லை அதில் கள்ளம் – சிறிதும்
இல்லை அதில் கள்ளம்!
கொள்ளை கொண்டனர் ஹள்ரத் என்றும்
பிள்ளைகளின் நெஞ்சம் ! இனிய
பிள்ளைகளின் நெஞ்சம்! (சித்தையன் கோட்டையின்)

10. பள்ளம் மேடு எல்லாம் ஹள்ரத்
பார்வையில்  சமமாகும் ஹள்ரத்
பார்வையில் சமமாகும் ! ஹள்ரத்
உள்ளம் முழுதும் நபியின் அன்பில்
ஊறிய கடலாகும்! அன்பில்
ஊறிய கடலாகும்! (சித்தையன் கோட்டையின்)

11. செல்லத்துடனே மாணவர் மீது
சீறுவதில் சிங்கம் –ஹள்ரத்
சீறுவதில் சிங்கம்! உடன்
வெல்லம் போலே மாறி உள்ளம்
வெல்வதிலே தங்கம் ! உள்ளம்
வெல்வதிலே தங்கம்! (சித்தையன் கோட்டையின்)

12. வானவியலிலே வானம் போலே
படைத்திட்டார் ஞானம் -ஹள்ரத்
படைத்திட்டார் ஞானம்
வடிவியல் துறையும் கணிதமும் ஹள்ரத்
காலடியில்  சரணம் !  ஹள்ரத்
காலடியில் சரணம்! (சித்தையன் கோட்டையின்)

மார்க்கக் கலைகள் அனைத்தும் அவர்தம்
மனதினிலே தஞ்சம்! அவர்தம்
மனதினிலே தஞ்சம்!
மாபெரும் தீனின் அறிவுக் கடலாம்
எங்கள் மகான் நெஞ்சம்! கடலாம்
எங்கள் மகான் நெஞ்சம்!(சித்தையன் கோட்டையின்)

News

Read Previous

வண்ணத்துப்பூச்சி – வகைகளும் தமிழ்ப்பெயர்களும்

Read Next

வசந்தகாலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *