கோபம்

Vinkmag ad

கவிஞனே, உன் மீது எனக்கு கோபம்

கவிஞனே, 

என் கண்கள் பேசும் என்றாய்  

அதற்கு (உனக்கேற்ற) பொருளை ஏன்  புகுத்தினாய்  

என்  நாணம் காதலை சொல்லும் என்றாய் 

என் நாணத்திற்கு ஒரே பொருள் என்று ஏன் நினைதாய்

என் குரல் இனிமை என்றாய் 

என் குரலின் வரும் பொருளை ஏன் மறைத்தாய்? 

நான் போவென்றால் அதற்கு  வாவென்று  பொருள் என்றாய் 

என் சொல்லின் பொருளை ஏன் மாற்றினாய்? 

என் மௌனம் சம்மதம் என்றாய் 

என் மௌனதை என்னை கேட்காமல் ஏன் மொழி பெயர்த்தாய்? 

 

கவிஞனே, உன் மீது எனக்கு கோபம் 

என் உடல் பாகங்களின் அசைவுக்கு மட்டும்  பொருள் கொடுதாயே 

இந்த உடலுக்குள் ஒரு உயிர் உண்டு, 

அந்த உயிருக்கு பல எண்ணங்கள் உண்டு 

அந்த எண்ணங்கள்  நிறைவேற பல உரிமைகள் வேண்டும் 

அந்த உரிமைகளை கேட்க எனக்கு ஒரு குரல் உண்டு, 

அந்த குரலை மதித்தாயா?

 

பிரேமலதா கருப்பையா (Premalatha Karupiah) 

இவர் Universiti Sains Malaysia-இல் பணிபுரியும் ஒரு சமூகவியலாளர். இவர் பெண்மை, பெண்ணியம் பற்றி ஆய்வுகள் செய்கிறார்.  

News

Read Previous

வாழ்த்துகிறேன்

Read Next

தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *