குறும்பாக்கள்

Vinkmag ad

குறும்பாக்கள்.

————————————-ருத்ரா

மழை

நெஞ்சுக்குள்

ஒரு பிரதேசம்

புல்வெளியாகி விடுகிறது.

______________________________(1)

வெள்ளம்

தண்ணீரின் சீற்றமா?

அல்லது

எங்கிருந்தோ பீறிட்ட‌

கண்ணீரின் ஆவேசமா

________________________________(2)

மழைக்காலத்தொடர்.

மேஜையின்

முதுகுகள்

என்ன பாவம் செய்தன?

_________________________________(3)

எவ்வழி அவ்வழி ..

நாடாகொன்றோ

காடாகொன்றோ

ஓட்டுக்கு ரெண்டாயிரமாம்.

————————————————-(4)

தடுப்பூசி

வாருங்கள்

ஒரு கை பார்த்துவிடலாம்.

உயிரின் “உயிரிகள்” ரெடி.

_______________________________________(5)

மசோதாக்கள்

கொரோனா சீசன்.

எல்லாம் இங்கே

கொத்து கொத்தாகத்தான் வரும்.

______________________________________(6)

News

Read Previous

முதலில் நாம் திருந்த வேண்டும்

Read Next

உதவித்தொகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *