குரைக்க முடியாமல் !

Vinkmag ad

குரைக்க முடியாமல் !

எஸ். நளீம்

நாய் என்றால்

அது குரைக்க வேண்டும்

கடிப்பது இரண்டாம் பட்சமே

 

கடிக்காததும் நாய்தான் – ஆனால்

குரைக்காதது நாயாகாது

 

கடிப்பது பாசிசம்

குரைப்பது ஜனநாயகம்

பல நாய்கள் கடித்துச் சாதிக்காததைக்

குரைத்தே சாதித்திருக்கின்றன.

 

குரைக்க ஒரு நாய் வேண்டும்

எங்கள் நாய்களால்

குரைக்கவும் முடியவில்லை

கடிக்கவும் முடியவில்லை

 

குரைக்கின்ற

மற்ற நாய்களையும் விரட்டிவிட்டு

ஊர் நாய் என்பதையே

தகுதியாய்க் கொண்டு

இந்த இயலா நாய்களையே

வாசலில் கட்டினோம்

 

பாவம்

அது என்ன செய்யும்

நண்பன் வந்தாலும், எதிரி வந்தாலும்

நாய்க்குரிய பண்பில்

வாலை மட்டும் ஆட்டுது !

 

நன்றி :

 

இனிய திசைகள்

அக்டோபர் 2014

News

Read Previous

அதிக பேட்டரி பேக்அப் மொபைல்களின் டாப் 10 பட்டியல்!

Read Next

மலடு நீக்கும் அதிமதுரம்!

Leave a Reply

Your email address will not be published.