குடித்தவன் வாழ்க்கை …..

Vinkmag ad

குடித்தவன்  வாழ்க்கை …..

திருச்சி A.முஹம்மது காசிம்

ஜித்தா – சவூதி அரேபியா

  • குடிகாரன்

ரோட்டில் மயக்கத்தில்!

குடும்பத்தினர்

வீட்டில் கலக்கத்தில்!

 

  • குடிக்க துவங்கிய போது,

அவன் வீட்டில்

வறுமையும் குடியேற துவங்கியது!

 

  • மது அவனைக் குடிக்கும் முன்,

குடுவையில்

அவன் ஆயுளை அளந்து கொண்டான்!

 

  • முதலில்

மதிகெட்டுப்  போனது !

போதையில் பாதை மாறிப் போனது!

 

  • கடைசியில்

வாழ்க்கை தறிக்கெட்டுப் போனது

அவன் விதியே கோரமாய் முடிந்துப் போனது!

 

  • கோமான்கள் கோபுரத்தில்

குடித்து அடிக்கும்

பெருமை கொண்டாட்டம் !

  • குடிசைவாசிகள்

வயித்துக்கே வழியின்றி

வறுமையில் திண்டாட்டம் !

 

  • அப்பன்

குடியை தொட்டான்

பையன்

பாதியில் படிப்பை விட்டான்

 

  • மில்லியில் துவங்கிய குடியால்,

வீட்டில் உள்ள சல்லியும்

மில்லியானது!

 

  • கவலையை போக்க,

கணவன்

கள்ளை குடிக்க போனான் !

வறுமையை போக்க,

மனைவி

கல்லை உடைக்க போனாள் !

 

  • “குவாட்டர் “அடிக்கும் போது,

குடும்பத்திற்கு

தெரியவில்லை!

புல்” அடித்து வந்த போதுதான்,

புரிந்துக் கொண்டாள்

மனைவி !

 

  • குடித்தவன்

வாழ்க்கை

பாடையில் முடிந்ததுவிட்டது!

குடும்பத்தினர்

வாழ்க்கை

வீதியில் தொடங்கிவிட்டது!

 

  • குடியினால்

அழிந்த ராஜ்யங்களின்

சரித்திரங்கள் அதிகம்!

குடியினால்

குடும்பங்களில் விளைந்த

தரித்திரங்களும் அதிகம்!

****************************************************************************************************************

News

Read Previous

வானத்தைவிடப் பரந்து விரிந்தது

Read Next

திருச்சி டவுண் காஜிக்கு பேத்தி

Leave a Reply

Your email address will not be published.