காலடித்தடங்கள்

Vinkmag ad

காலடித்தடங்கள்

 

—- ஹைருன் ரஹ்மான், அழகன்குளம்

காலடிபட்ட சுவடுகள்
வாழ்க்கைபாதையின் ஓட்டத்தில்
காணாமல் போன
குதிரை வேக ஓட்டங்கள்
.
திருட்டுமாங்காயின் ருசியில்
பசியுணர்ந்த ஊன் தசைகள்
.
வளைந்து நெளிந்துருகும்
இச்சை கொம்பின் உச்சாணிகள்
.
மின்சார கம்பியில்
பின்னிய புருவ மயிர்கள்
.
வேப்பங்காத்தோடு,பேசிய
இனிந்த வார்த்தைகள்
.
கருவேலமரத்தோடு ஓட்டி
உறவாடும் பச்சோந்திகளைக் காணாத கைகளின் உதறல்கள்
.
முருங்கைப் பிசினில் ஒட்டிக்கொண்டிருக்கும்
மடலின் குழைந்த வார்த்தைகள்
.
கையைத் திருகி கடிகாரம்
போடும் ஜவ்வுமிட்டாய் வாட்சுகள்
.
மேற்கொண்டு,

மீசையாய் இழுத்து விடப்படும்
எச்சில் கொசுறுகள்
.
அவன் முழுநீலக்கை ஜிப்பாவோடு
கட்டை மாட்டிய செருப்போடு
.
கையில் மூங்கில் கம்பின் உச்சாணியில்
ஜால்ரா தட்டி தலையை ஆட்டிக் கொண்டிருக்கும்
கவுன் தொப்பி போட்ட பொம்மை
.
அது கூடவே தெரு தெரியாமல் ஓடிப் போகும்
காலடித்தடங்கள்

News

Read Previous

செல்வன் சுஜித்துக்கு அஞ்சலி வெண்பாக்கள்!

Read Next

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *