காதல் பித்தன்

Vinkmag ad
காதல் பித்தன்

மொட்டு மலர்வதைப்போல்

மலரும் உன் இதழ் மொட்டு!
பட்டாசு வெடிப்பதுபோல் என்
சிந்தை சிதறும் உன் விழிபட்டு!
கட்டவிழ்த்த குதிரையாய்
அலையுது என் மனம் கெட்டு!
அலையும் மனதை அடக்கிவிடு
அருகில் வந்தெனைத் தொட்டு!
சிற்றாடையில் சிறகடிக்கும் நீயொரு
சிங்காரப் பூஞ்சிட்டு!
பட்டுச்சேலை கட்டி
பருவமங்கை ஆனாலும்
என்றும் உன் வயதோ பதினெட்டு!
உன் இதழில் ஊறும் தேனில்
கொடுத்துவிடு குறைந்தது ஒரு சொட்டு!
எப்போதும் என் மனம்
உன் பின்னால் அலைவதனால்
வாங்குது என்னிடம் திட்டு!
========================================
என்றும் அன்புடனும் நன்றியுடனும்
ஜியாவுத்தீன்
அஜ்மான் – அமீரகம்

News

Read Previous

“ஸ்டெம்செல் மூலம் பல நோய்களுக்குத் தீர்வு’

Read Next

மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடித்தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *