கவிதையும் கற்பனையும்

Vinkmag ad

கற்பனை என்னும் கவின்விதை போட்டு

அற்புதம் நிகழ்த்தும் அருமலர்ப் பூத்துச் 

சொற்பதம் யாவும் சுந்தரக் கனியாம்

கற்பதே ஈண்டுக் கவிதையாய்க் கனியும்!

காதலி  காட்டும் கயல்விழி போதை

ஆதவன் கதிரின் ஆளுமைப் பாதை

மாதுளம் பழமாய் மனம்விழும் சொற்கள்

பாதையைக் காட்டும்  பயணமைற் கற்கள் 

 

வானகம் இடிக்க வண்ணமயில் ஆட்டம் 

கானகக்   குயிலின் காற்றிசைப் பாட்டும்

தேனெனக் கவிதைத் தீஞ்சுவை தூண்டும்
கானமாய்ச் சிறக்கக் கற்பனை வேண்டும்

 

கவியன்பன் கலாம்

அதிராம்பட்டினம்(பாடசாலை ), அபுதபி(தொழிற்சாலை)

அலைபேசி: 0508351499 மின்மடல்: kalamkader2@gmail.com

 

News

Read Previous

ஓய்வுபெற்ற அதிகாரி, வக்கீல் மோதல்

Read Next

முதுவை ராசி மெடிக்கல் ஹுசைனுக்கு பேரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *