கல்வி

Vinkmag ad

கல்வி

 

 

திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்

தோஹா – கத்தர்

thahiruae@gmail.com

 

 

 

 

  • பொறியியல் படித்த மாப்பிள்ளை

வாங்கிய வரதட்சணை

பத்து இலட்சம் !

நெறியியல்

கற்றுத்தரப் படவில்லை !

 

 

  • உயிருக்குப் போராடிய

ஏழை நோயாளி !

இரண்டு இலட்சம் கேட்டார்

இதயமில்லாத மருத்துவர்!

மனிதத்துவம்

அவர் அறிந்திருக்கவில்லை !

 

 

 

 

 

  • ஒழுக்கம் உயிரினும்

ஓம்பப் படும் !

பாலர் பள்ளியில்

சொல்லித்தருகிறார்கள் !

பள்ளிக் குழந்தைகளிடம்

பாலியல் பலாத்காரத்தில்

ஆசிரியர் சிலர் ஈடுபடுகின்றனர் !

 

 

  • துறவறமே தூய்மை

சொல்லித்தரும் மத பீடங்கள் !

விபச்சாரம் நடக்கும்

மடங்கள் !

 

  • பட்டி மன்றங்களில்

கல்வியே உயர்ந்தது என

தீர்ப்பளிக்கப் படுகிறது !

பள்ளிக்கூடத்தில்

நன்கொடை கொடுத்தால்தான்

சேர்க்கப் படுகிறது !

 

  • எழுதப் படிக்கத் தெரியாத

ஏழை மக்களிடம்

சான்றிதழில் கையெழுத்துப் போட

கையூட்டு வாங்கும் வாங்கும் அதிகாரிகள் !

 

  • நிதி அதிகமாக

கொடுத்தால்

திறமையாக வாதம் செய்து

குற்றவாளிகளை விடுவித்து

நீதியை சிறையில் அடைக்கும்  வழக்கறிஞர்கள் !

 

 

  • அணு ஆயுதம் தயாரித்து

மண்ணை விஞ்ஞானிகள் ஆக்கியது

நாசம் !

அணு அணுவாய் பெண்ணை வர்ணித்து

கவிஞர்கள் எழுதிய கவிதைள்

ஆபாசம் !

 

 

  • திருடும் கொள்ளையும்

சான்றிதழ்

பெறாமல் செய்வதால்

குற்றம் செய்தவராய் கருதப் படுகின்றனர் !

அதையும்

சான்றிதழுடன் செய்தால்

கற்றவராய் மதிப்புப் பெற்றவராய்

கருதப் படுவர் !

 

 

 

 

  • நாகரீகம் கல்வி தரவில்லை என்றால்

இரக்கமே இந்த கல்வியில் இல்லையென்றால்

தீயில் எறியுங்கள்

இப்புத்தகங்களை !

ஆதி மனிதர்கள் நல்லவர்கள் !

 

  • படிப்புக்கள் உங்களுக்கு

அதிகாரமும் மக்களை அடிமைப் படுத்தவும்  மட்டும்தான்

கற்றுத்தருகிறது என்றால்

வேண்டாம் கிழித்தெறியுங்கள்

இப்பட்டங்களை !

படிக்காத மனிதர்களே சிறந்தவர்கள் !

 

 

 

 

 

 

  • கல்வி

மனப் பாடம் மட்டுமல்ல !

அது

மனசாட்சிகளின் பாடம் !

 

  • கல்வி

வாசிப்பது மட்டுமல்ல

அது

சக மனிதனை நேசிப்பது !

 

  • மதிப்பெண்கள் பெறுவது மட்டும்

கல்வியல்ல !

மனிதத்தின் மதிப்பு அறிவதே

நூறு சதவீதம் கல்வியாகும் !

 

 

 

 

News

Read Previous

கனிகரம்

Read Next

சீன வானொலி : தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டி

Leave a Reply

Your email address will not be published.