கதவடைப்பு

Vinkmag ad

கதவடைப்பு

–   அரிஅரவேலன்

காலடி மண்ணும்

கண்ணுக்குத் தெரியக்கூடாதென்று

சுற்றுக்கல் பாவிய வீட்டின்

வலசைக் கதவை எக்கிப் பிடித்து

தோளில் மண்வெட்டி தொங்க

தோட்டவேலை  கேட்கிறார்

70அகவை முதியவர்

அக்கதவின் தாழ்ப்பாளை

ஆட்டி அழைத்து

ஒரு கட்டு அகர்பத்தியை

ஓர் உருபாய்க்காவது வாங்கும்படி

கம்மிய குரலில் இரைஞ்சுகிறார்

கைக்கோலை தரையில் தட்டியே

பத்து கிலோமீட்டர் கடந்தவந்த

50 அகவை விழியற்ற கிழவர்

ஒரு கையில் 3அகவைச் சிறுமியும்

மறுகையில் கொஞ்சம் காசுகளும்

சூல்கொண்ட வயிறுமாய் வந்து

அக்கதவினைத் தட்டிய குடும்பத்தலைவி

பொங்கும் கண்ணீரோடு கேட்கிறார்

பிழைப்பிற்கு வீட்டுவேலையும்

பிள்ளைக்கும் நோயுற்ற கணவனுக்கும்

இன்று ஆக்கிக்கொடுக்க

கொஞ்சம் அரிசியும் கிழங்கும்

அக்கதவை நெருங்கி

குரல் கொடுக்கக் கூசிய பாட்டி

தெருவில் ஊர்ந்துகொண்டே

கதவிடுக்கில் கண்களால் துழாவுகிறார்

யாரேனும்

தனது நிலையைக்கண்டு இரங்கி

சில நாணயங்களேனும்

தருவார்களா என்று

தம்பிக்கும் தங்கைக்கும்

தின்பண்டம் வாங்கிக்கொடுக்க

அக்கதவில் தாளம்போட்டு

வேலைகேட்கிறார்

நேரலை வகுப்பில்

பாடங்கற்கவாய்ப்பற்ற

11 அகவைப் பள்ளிச்சிறுவர்

அக்கதவின் அப்பக்கம்

வீட்டிலிருந்து

நாளும் 12 மணிநேரம்

உழைப்பதால் கிடைக்கும்

வெட்டுவிழுந்த சம்பளத்தில்

வீட்டுக்கடன் தவணை

மின்சாரக்கட்டணம்

பெற்றோருக்கு மருந்து

பிள்ளைக்குக் கல்வி

ஐவருக்கும் அரைவயிற்று உணவு

ஆகிய அனைத்திற்கும்

ஒதுக்கிய பின்னர்

மீந்த பணத்தை

கதவடியில் கேட்கும் குரலுக்கும்

கதவிடுக்கில் நுழையும் பார்வைக்கும்

பகிர்ந்துகொடுக்கும்

அவளும் அவனும் பார்த்த

தொலைக்காட்சியில்

பேசிக்கொண்டிருந்தார்

நாட்டின் தலைமை அமைச்சர்

“கைதட்டி, விளக்கேற்றி, பூத்தூவி

மகுடைப் பெருந்தொற்றை

நாங்கள் வெல்வதைக் கண்டு

வியக்கிறது உலகு!”

கதவடைப்பு

–   அரிஅரவேலன்

காலடி மண்ணும்

கண்ணுக்குத் தெரியக்கூடாதென்று

சுற்றுக்கல் பாவிய வீட்டின்

வலசைக் கதவை எக்கிப் பிடித்து

தோளில் மண்வெட்டி தொங்க

தோட்டவேலை  கேட்கிறார்

70அகவை முதியவர்

அக்கதவின் தாழ்ப்பாளை

ஆட்டி அழைத்து

ஒரு கட்டு அகர்பத்தியை

ஓர் உருபாய்க்காவது வாங்கும்படி

கம்மிய குரலில் இரைஞ்சுகிறார்

கைக்கோலை தரையில் தட்டியே

பத்து கிலோமீட்டர் கடந்தவந்த

50 அகவை விழியற்ற கிழவர்

ஒரு கையில் 3அகவைச் சிறுமியும்

மறுகையில் கொஞ்சம் காசுகளும்

சூல்கொண்ட வயிறுமாய் வந்து

அக்கதவினைத் தட்டிய குடும்பத்தலைவி

பொங்கும் கண்ணீரோடு கேட்கிறார்

பிழைப்பிற்கு வீட்டுவேலையும்

பிள்ளைக்கும் நோயுற்ற கணவனுக்கும்

இன்று ஆக்கிக்கொடுக்க

கொஞ்சம் அரிசியும் கிழங்கும்

அக்கதவை நெருங்கி

குரல் கொடுக்கக் கூசிய பாட்டி

தெருவில் ஊர்ந்துகொண்டே

கதவிடுக்கில் கண்களால் துழாவுகிறார்

யாரேனும்

தனது நிலையைக்கண்டு இரங்கி

சில நாணயங்களேனும்

தருவார்களா என்று

தம்பிக்கும் தங்கைக்கும்

தின்பண்டம் வாங்கிக்கொடுக்க

அக்கதவில் தாளம்போட்டு

வேலைகேட்கிறார்

நேரலை வகுப்பில்

பாடங்கற்கவாய்ப்பற்ற

11 அகவைப் பள்ளிச்சிறுவர்

அக்கதவின் அப்பக்கம்

வீட்டிலிருந்து

நாளும் 12 மணிநேரம்

உழைப்பதால் கிடைக்கும்

வெட்டுவிழுந்த சம்பளத்தில்

வீட்டுக்கடன் தவணை

மின்சாரக்கட்டணம்

பெற்றோருக்கு மருந்து

பிள்ளைக்குக் கல்வி

ஐவருக்கும் அரைவயிற்று உணவு

ஆகிய அனைத்திற்கும்

ஒதுக்கிய பின்னர்

மீந்த பணத்தை

கதவடியில் கேட்கும் குரலுக்கும்

கதவிடுக்கில் நுழையும் பார்வைக்கும்

பகிர்ந்துகொடுக்கும்

அவளும் அவனும் பார்த்த

தொலைக்காட்சியில்

பேசிக்கொண்டிருந்தார்

நாட்டின் தலைமை அமைச்சர்

“கைதட்டி, விளக்கேற்றி, பூத்தூவி

மகுடைப் பெருந்தொற்றை

நாங்கள் வெல்வதைக் கண்டு

வியக்கிறது உலகு!”

அன்புடன்,

அரிஅரவேலன்
http://ariaravelan.blogspot.in

News

Read Previous

சுண்ணாம்பு

Read Next

120 மாணவ மாணவிகளுக்கு இலவசக் கல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *