120 மாணவ மாணவிகளுக்கு இலவசக் கல்வி

Vinkmag ad

120 மாணவ மாணவிகளுக்கு இலவசக் கல்வி

இடம் : மகாத்மா கல்லூரி வளாகம் / தேதி: 08.08.2020 / நேரம்: காலை 11.00 மணி

கல்விப்பணியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புடன் செயல் பட்டு வரும் மகாத்மா கல்வி நிறுவனங்களும், “கல்வி பணியே அறப்பணி” என்று செயலாற்றி வரும் மகமூத் அம்மாள் கல்வி அறக்கட்டளையும் மற்றும் 68 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், ரோட்டரி மாவட்டம் 3000 (District 3000) இணைந்து 120 மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வியை வழங்க இருக்கிறது.

இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி & இன்ஜினியரிங் கல்லூரிகளில் தலா 40 இடங்களை பொருளாதாரத்தில் மிக மிக மிக பின்தங்கிய, படிக்க ஆர்வமிருந்தும் படிக்க இயலாத சூழ்நிலையில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு, இப்போதைய கோவிட் 19 சூழ்நிலையில் அவர் தம் பெற்றோர்களின் நிலையையும் கருத்தில் கொண்டு, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவையும் வளர்ச்சியையும் நிறைவேற்றும் விதமாக மதிப்பெண் அடிப்படையில் நான்கு வருடமும் கல்வியுடன் இலவச பேருந்து வசதியும், உணவு வசதியும் மகமூத் அம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாகம் கட்டணமின்றி வழங்க இருக்கிறது.

அத்தகைய தகுதி உடைய மாணவர்களை மகாத்மா கல்வி நிறுவனமும் புதுக்கோட்டை ரோட்டரி சங்கம், ரோட்டரி மாவட்டம் 3000 (District 3000) இணைந்து பரிசீலனை செய்து தேர்ந்தெடுக்கும். இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்தி, மாணாக்கர்கள் 30.09.2020 தேதிக்குள் கீழ்கண்ட இணைய தளத்தில் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

தகுதியான மாணவர்களை மகாத்மா கல்வி நிறுவனமும் ரோட்டரி சங்கம், ரோட்டரி மாவட்டம் 3000 (District 3000) சேர்ந்து அறிவிப்பை வெளியிடும்.

ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்கள் கீழ்கண்ட தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இந்த பதிவு தங்களுக்கு பயன் படாத பட்சத்தில், ஏழை எளிய மாணவர்களுக்கு பயன் படும் வகையில் மற்றவர்களுக்கு பகிருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

ஆன்லைன்-ல் பதிவு செய்து கொள்ள வேண்டிய இணையதள முகவரி: www.maietpdkt.org/admission

ஆன்லைன் வசதியற்ற மாணவர்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள்: 7339128011 & 8056928011.

மேலும் விபரங்களுக்கு: www.maietpdkt.org

இங்ஙனம்,
Rtn.PP.முகமது நாசர்
தலைவர்
மகாத்மா கல்வி குழுமம்- புதுக்கோட்டை

News

Read Previous

கதவடைப்பு

Read Next

தமிழக அரசு அருங்காட்சியகத் துறை பதிவேற்றியுள்ள அரிய தமிழ் நூல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *