கண்கள்

Vinkmag ad

கண்ணைப் பற்றியே கவிதையை எழுத

கண்ணை மூடிநான் கணநேரம் அயர

விண்ணத் தாண்டி வந்தாய்; உன்றன்

கண்ணைப் பார்த்ததில் கவிதைத் தோற்றதே!

கண்ணைக் காணவே கவிதை ஊற

மண்ணைக் காணுமுன் முழுநிலா வடிவம்

கண்ணை விட்டும் காணோம்; என்றன்

கண்ணை ஈர்த்தது கவிதைக் கண்ணே!

கருவிழிப் படலம் கண்ணின் வேலாய்

ஒருவழிச் செயலால் உள்ளம் தீண்ட

மைவிழி யாலே மெய்கவி இயற்றும்

மைவிழி யாளவள் மைவிழி எழிலே!

-அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மரண பயத்தில் பயணிக்கும் மக்கள்

Read Next

பிளாஸ்டிக் பாதுகாப்பைத் தாண்டிய பயங்கரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *