கட்டுப்பாடு

Vinkmag ad

கட்டுப்பாடு

சுழலும் பூமி
தன் ஆர்வம் மிகுந்து
வேகமாய் சுழன்றாலும்
மெதுவாக உழன்றாலும்
தமக்கே ஆபத்தென்று
தன் நிலை மாறாமல்
தன் அச்சினில் சுழல
கற்றுத்தந்தது யாரு?

வானமே எல்லை
என
பறக்கும் பறவையும்
இரைத் தேடி வெகு தூரம்
பறந்தாலும்
பொழுது சாயும் வேலையிலே
தன் கூடு தேடி வர
பட்சிக்கு
சொல்லித்தந்தது யாரு?

உயரே காற்றினில் படபடக்கும்
வண்ண காகித பட்டமும்
மாஞ்சா எனும் கயிற்றின்
துணையோடு
அழகாய் வானில் பறப்பதை பாரு!

பாடும் பாட்டினில்
தாளக்கட்டை இழந்தும்
இனிமை குறைந்தும்
பாடும் பாட்டை
கேட்க மறுக்கும்
காதிற்கு
அது ஸ்ருதி பேதம்
எனச் சொன்னது யாரு?

சுவாசிக்க உதவிடும் நுரையீரலும்
நம்மை இயக்கிட துடிக்கும் இதயமும்
உடம்பினில் ஓடும் குருதியும்
இப்படி அனைத்தும்
கட்டுப்பாட்டில்தான் உள்ளது
என மனிதா!
உனக்கு உரைப்பது யாரு?
கட்டுப்பாடில்லாமல் இருப்பது
மனித மனம் மட்டுமென
மனிதா! உனக்கு அறிவுறுத்துவது யாரோ?

அன்புடன்
ஸ்ரீவிபா.

News

Read Previous

காரைக்குடி உணவகம்

Read Next

இணையத்தை கலக்கும் இந்துஜா: பெங்களூரு தமிழ் பெண்ணின் திருமண நிபந்தனைகள்

Leave a Reply

Your email address will not be published.