ஒரு தந்தையின் தியாகமும் வலியும்

Vinkmag ad

ஒரு தந்தையின் தியாகமும் வலியும்
================================
என் துணை இறந்த பின்னே
இன்னும் ஒரு துணையை நான்
தேடாமல் உன்னை வளர்த்தேன்
என் மகளே..!!

தொட்டில் கட்டி
தாலாட்ட தெரியாது
கட்டில் போட்டு
சீராட்டி வளர்த்தேன்..!!

கொல்லங் கம்மாளையில்
இரும்பு அடித்தேன்
பாதையில் கல் உடைத்தேன்
முதுகு வலிக்க மூட்டை
சுமந்தேன்  வீட்டுக்கு
வந்ததும் உன்யைும்
சுமப்பேன்…!!!

தட்டிக் கொடுத்து
விட்டுக் கொடுத்து
செல்லம் பொழிந்து
பாராட்டி வளர்த்தேன்..!!

நான் உண்ணாமல்
இருந்து உன்னை
பட்டப் படிப்பு வரை
பறக்க விட்டேன்..!!

உன் அன்னை இருக்கும்
வரை நான் துணியே
துவைத்தது இல்லை…!!

ஆனால் உன் துணியை
துவைத்து  பார்த்து
பார்த்து மடித்து வைப்பேன்..!!

சுவையாக  சமைத்து
தராவிட்டாலும் உன்
பசிதீர்க்க சமைத்துப்
போட்டேன்…!!!

தந்தையான நான்
தாயுமாகஇருந்தேன்
இல்லறம் வரை கொண்டு
வந்து இன்பமாக அமைத்து
தந்தேன்…!!

அன்பு இல்லம் ஒன்று
இருப்பதையே நீ
அறிந்ததேயில்லை..!!!

என் அன்பு மழையில்
நனைந்து மலர்ந்த
மலர் மகள்  நீ..!!

இன்று என்னை
விட்டுச் செல்ல
வந்து விட்டாய்
முதியோர் இல்லம் தேடி..!

எங்கங்கோ அலைந்து
அறிந்து கண்டு பிடித்து
அழைத்தும் வந்து விட்டாய்..!!

உன் ஆசைகள்
அத்தனையும்
நிறைவேற்றிய
நான் இன்று இவ்
ஆசையையும்
நிறைவேற்றி உன்
ஆசைக்கு வைத்து
விட்டேன் முற்றுப்  புள்ளி..!!

மகளேஒரு சிறு
வேண்டு கோள்
நீ என்னைப் பார்க்க
வரும் போது என்
பேரனைக் கொண்டு
வரவேண்டாம்..!!

உன் பிள்ளை பின்னர்
உன்னைக் கொண்டு
விடுவதற்கு இப்போதே
இடம் தேட ஆரம்பித்து
விடுவான்…!!

என்னைப்  போல் நீ
அனாதையாக இங்கே
வரவேண்டாம் உனக்கு
இப்படி ஒரு நிலமை
வரக்கூடாது..!!

எப்போதும் நீ சந்தோசமாக
இருக்க இறைவனை
வேண்டுகின்றேன்  நீயாவது
கடைசி வரை பிள்ளையுடன்
இருக்க வேண்டும் என்று
பிராத்தனை செயவேன்..!!

விடு முறை எடுத்து
வரவேண்டாம் என்னைப்
பார்க நேரம் கிடைக்கும்
போது வா நீ மட்டும் சென்று வா
மகளே கவணமாக பாதையைப்
பார்த்துப்  போய் வா…!!

ஆர்  எஸ்  கலா
இலங்கை

News

Read Previous

எழுத்தாளர் சுஜாதாவின் நேர்காணல் – நிஜந்தன்

Read Next

இந்தியாவில் மிக விரைவாக வளர்ந்து வரும் திருச்சி விமான நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *