ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனைக் கவிதை

Vinkmag ad

ஏ.ஆா்.தாஹாவின்
சிந்தனைக் கவிதை
—————————————
முத்திரை நபி ! முடிவான நபி !!
—————————————————-
உலகுக்கு ஔியாய்
உத்தமத் தூதாய்
……………..அருளாய் வந்த நபி – நல்ல

மலருக்கு மணம் போல்
மாந்தர்கள் நெஞ்சில்
……………..தீனை விதைத்த நபி

இன்மொழியாக
ஓரிறைக் கொள்கையின்
உயர்வை சொன்ன நபி – என்றும்

இன நிறக் குலத்தால்
உயர்வில்லை என்ற
உண்மையை…… விண்ட நபி

…………………….உலகுக்கு ஔியாய்

மயக்கும் மண் வாழ்வில்
கிறக்கம் கொள்ளாமல்
மாந்தரைக் காப்பதற்கே – நல்ல

நெறி வழி காட்டி
நேர்மைகள் ஊட்டி
தீமைகள் மாய்த்திடவே……….

இத்தரை மீதில்
எத்தனையோ இறைத்
தூதர்கள் வந்தனரே -அதில்
சித்திரை நிலவாய்
முத்திரை நபியாய்
முடிவாய்……. வந்தவரே

…………………………உலகுக்கு ஔியாய்

ஹக்கனை மறந்து
சித்தமும் இழந்து
மனம் போல் வாழ்ந்தனரே

ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ….

ஹக்கனை மறந்து
சித்தமும் இழந்து
மனம் போல் வாழ்ந்தனரே – அந்த

மெத்தன மாந்தர்
சத்தியம் பேண
நித்தமும்….. உழைத்தவரே

……………………….உலகுக்கு ஔியாய்

பாடலாக்கம் :
அல்ஹாஜ். A.R.தாஹா

பாடிப் பதிவாக்கம் :
அல்ஹாஜ். M.F.யாகூத் (ஜித்தா)

News

Read Previous

வனமகன்; ஒரு வாழ்வியலின் அடையாளம்..

Read Next

முதுகலை தமிழ் பயில் கல்விக் கட்டண சலுகை ………

Leave a Reply

Your email address will not be published.