ஏந்தல் நபியே …..

Vinkmag ad

பாடல் : பேராசிரியர் டாக்டர் நாகூர் ரூமி

பாடியவர் : திரைப்படப் பாடகர் S.H. அப்துல்காதர்

மெட்டு: பஹுத் ப்யார் கர்தேஹேன்

இறுதியான ஏந்தல் நபியே
எங்கள் ஸலாம்
உறுதியான மார்க்கம் தந்த
ஒளியே ஸலாம்

கஅபாவுக் குள்ளே
சிலைகளை வைத்து
குறைஷியர் சொன்னார்
கடவுள்கள் என்று

இறைவன் ஒருவனே என்று
உரைத்தார்களே (இறுதியான)

கொலை களவு காமம்
மலிந்த அக்காலம்
நேரிய பாதை
காட்டிய மேதை

பூமான் நபி தந்தார்
ஈமானையே (இறுதியான)

இதயத்தின் சாவி
அழுகை என்றாலே
சுவனத்தின் சாவி
தொழுகை என்றார்கள்

புகழ் பாடியே உங்கள்
புகழ் பாடியே எந்தன்
உயிர் வாழுமே (இறுதியான)

News

Read Previous

12 வகை முக்கிய ஆவணங்கள் தொலைந்தால்… எப்படி திரும்பப் பெறுவது…?

Read Next

விருந்தோம்பல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *