எழுச்சி நாயகன்

Vinkmag ad

எழுச்சி நாயகன்

புனித பூமியில்

உதித்து

புனிதம் சேர்த்த

புனிதன் நீ

 

நெற்றியில் நேர்வாக்கு

நெறிதவராத பயணம்

இளம் இந்தியாவை

உட்சிக்கு கொண்டு சென்ற

இளைஞன் நீ

 

கல்லூரியில் கால் பதித்தாய்

கல் உடைத்தவனும்

கல்லூரிக்கு சென்றான்

தமிழுக்கு பெருமை சேர்த்த

தமிழ் ஞானி நீ

 

விஞ்ஞானத்தையும்

மெய்ஞானத்தையும்

இளைஞர்களுக்கு ஊட்டிவளர்த்த

மதம் பிடிக்காத

மாமனிதன் நீ

ஊனமுற்றோர்களையும்

நடமாட வைத்து

வாழ வைத்த தெய்வம்

வாழ்க்கையின்

அச்சாணி நீ

 

இளைஞர்களின்

எழுச்சி நாயகன்

இஸ் ரேலுக்கு

சிறகு கொடுத்து

அக்னி சிறகு – நீ

 

இந்திய தாயை

கோபுரத்தில் அமரவைத்து

அழகு பார்த்த

கடைக் கோடி குடிமகன்

முதல் குடிமகன் நீதான்

 

நீள் வண்ண ஆடை

உனக்கு பிடிக்கும் என்று

நீல நிற வானத்தை

ஆடையாக உடுத்திச்

சென்றாயோ – நீ

 

உலக மேடைகளில்

நடிக்கதெரியாத நடிகன் – நீ

அதனால் தான்

உன் மறைவை கண்டு

உலக நாடுகளும்

கண்ணீர் சிந்தியது

 

கலாம்

காலமாகவில்லை

இந்திய மக்கள் மனதில்

காலமாய் உதித்து எழுகின்ற

எழுச்சி நாயகன்

எங்கள் அப்துல் கலாம்

எங்கள் அப்துல் கலாம்

 

என்றும் அன்புடன் :

ரா.ந.ஜெயராமன் ஆனந்தி

கீழப்பெரம்பலூர்

கைபேசி – 00971507258518

 

News

Read Previous

காந்தியமா? கோட்சேயிசமா? – காலித் அல் மயீனா!

Read Next

விண்ணைத் தாண்டி வருவாயா வெண்ணிலவே?

Leave a Reply

Your email address will not be published.