என்றும் வாழும் வான்மறை

Vinkmag ad

என்றும் வாழும் வான்மறை

வானகமும் பொய்த்து போகலாம்
வையகமும் வறன்டு போகலாம்
கானகமும் கலைந்து போகலாம்
வான்மறை மட்டும்நிலைத்து நிற்கும்

உணர்வுகள் மரத்து போகலாம்
உறவுகள் மறந்து போகலாம்
உயிர்கள் மாய்ந்து போகலாம்
உலகமறைமட்டும் நிலைத்து நிற்கும்

கடல்லைகள் அமைதியாகலாம்
காற்று வீசும் திசைகள் மாறலாம்
கனிகள் காய்ந்து கசந்து போகலாம்
கவின்மறைமட்டும் நிலைத்து நிற்கும்

இலைகள் உதிர்ந்து போகலாம்
மலைகள் பெயர்ந்து போகலாம்
பூக்கள் வாடி மணம் இழக்கலாம்
புர்கான் மட்டும் நிலைத்து நிற்கும்

அல்லாஹ் என்று சொல்ல ஒருவன்
அவனியில் தனியாய் இருக்கும் வரை
அல்லாஹ் கட்டளை தாமதிக்கலாம்
அவனும் இல்லை என்று போனால்

சுழலும் உலகம் நின்று போகலாம்
சூரிய சந்திரன் சுருட்ட படலாம்
பிற கோள்கள் பிளந்து விடலாம்
பிரபஞ்சங்கள் வெடித்து சிதறலாம்

மாற்றம் என்று வந்து விட்டால்
மறுமை ஒன்று நிகழ்ந்து விட்டால்
மாமறை மட்டும் மறைபொருளாய் மாறிவந்த வஹிபோல்வானம்ஏகலாம்

எம் முஹம்மது யூசுப் உடன்குடி

News

Read Previous

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்:

Read Next

சரஸ்வதி துதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *