என்ன செய்யலாம்

Vinkmag ad
பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 10ம் ஆண்டு போட்டிக்கான் கவிதையிது
                         என்ன செய்யலாம்

சந்தையில் வாங்கியதல்ல எந்தன் சொந்தக்கவிதையிது.
அந்த நாளில் ஆசிரியர் மாணவர்க்கு என்ன சொல்வார்?
சிந்தை குளிர செந்தமிழைத் தினந்தோறுங் கற்றிடுக
பெற்றோரை மதித்திடுக, இரப்போர்க்கு ஈதிடுக
கேட்போர்க்கு உதவிடுக, இன்முகத்தைக் காட்டிடுக
கல்லாமையைப் போக்கி இல்லாமையை ஒழித்திடுக.
இந்த நாளில் ஆசிரியர் மாணவர்க்குறைப்பதென்ன?
சொந்தமாய் ஆங்கிலத்தில் தினமும் எழுதிடுக
சோம்பலை முறிக்க யோகாவைக் கற்றிடுக .
மாலையில் டியுஷன், உணவிலே நூடுல்ஸ்,
நுனிநாக்கிலே பேச்சு , பேசாதிருந்தும் பழகு
செந்தமிழைத் திண்ணமாய்க் கற்றதினால்
நந்தனார் சிவனிடங் கொஞ்சினார்
கீரனோ அதனையும் விஞ்சினார்
மிஞ்சிய வாழ்க்கையோ சிற சில ஆண்டுதான்
நெஞ்சிலே நிறுத்தி இநநினைவகற்றாதீர்,
தி. ஆறுமுகம்,
ஜூன் 16, 15.
பிருந்தாலயா,
239 பெரிய தெரு,
திருநெல்வேலி-627006

News

Read Previous

ரமலான்

Read Next

அழகு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *