உழைக்கும் கரங்கள்

Vinkmag ad

மைசூர் இரா.கர்ணன்

சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா

உழைக்கும் கரங்கள்’சிறக்கும் வாழ்வில்

கவிதை

உழைத்து வாழும் உயர் நெஞ்சமே..
நினைக்க உன்னை பெருமை ஆகுதே..
பிறர் உழைப்பில் உறங்கி வாழும்
பெரும் வயதை தொட்ட போதும்
வெயில் அமர்ந்து உழைக்கும் நீயே
உயில் அமரும் உதாரணம் ஆனாய்,
ஊரும் உறவும் கை விடலாம்
உழைப்பே என்றும் காத்து நிற்கும்.
உணர வைக்கும் உன் உழைப்பு
உழைக்கத் தூண்டும் பிறர் மனதை,
தன்வசம் உழைப்பு தாங்கிடும் மானம்
இலவச வாழ்வும் என்றும் ஊனம்.
மரத்தடி வாழ்க்கை வாழ்வினும் வாழ்வார்
அறத்தடி பேணும் அருமையர் எல்லாம்.

மைசூர் இரா.கர்ணன்
02 .07 .2021

News

Read Previous

குறுங் கவிதை..

Read Next

பழம்

Leave a Reply

Your email address will not be published.