உலக தண்ணீர் தினம்

Vinkmag ad

உலக தண்ணீர் தினம் (மார்ச் -22) கவிதை

புவியின் பசுமை  பொலிவென ஆக்கிடு
புனலைக் காத்திட  புயலாய் புறப்படு
அவிழும் இயற்கையின் ஆடையைத் தடுத்திடு
அனலைப் போக்கிட அரும்பணி ஆற்றிடு
குவிந்த கரத்தால் கும்பிட்டு கேட்டிடு
கொடிசெடி வைத்து  குவலயம் காத்திடு
தவிக்கும் உயிர்க்கு  தண்ணீர் கொடுத்திடு
தரணியில் நீர்வளம் தழைத்திட செய்திடு

நீரியின்றி அமையாது நித்திலம் என்றிடு
நீர்த்’துளி எனினும் நேசம் வைத்திடு
பாரினில் நதிகள்  பாய்ந்திட செய்திடு
பசுமை மாறா பார்வை கொண்டிடு
தேரினைப் போன்றே  தேசத்தை மாற்றிடு
தேனென நீரை  தேக்கியே காத்திடு
காரிருள் பொழியும்  காலம் பார்த்திடு
களிக்கும் வகையில்  கணநீர் சேர்த்திடு

நாட்டின் நரம்பென நதிகளை நினைத்திடு
நாளும் நீர்வர  தேசீயம் ஆக்கிடு
நீட்டிய கரத்தில்  நேசம் வைத்திடு
நீர்வளம் உயிரெனே நாடே உணர்த்திடு
வீட்டில் தண்ணீர்  விரையம் தடுத்திடு
வீதியில் பாய்தல் வீணே நிறுத்திடு
ஏட்டின் கருத்தை  எடுத்து இயம்பிடு
இன்றே சிக்கனம்  இருக்க செய்திடு

-ப.கண்ணன்சேகர், திமிரி. 9894976159.

News

Read Previous

துபாயில் கார்கள் விற்பனைக்கு ……….

Read Next

உதவிசெய்யுங்கள் உயிர்களுக்கு…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *