உலக சுகாதார தின கவிதை

Vinkmag ad

ஏப்ரல் – 7, உலக  சுகாதார தின கவிதை

தனிமனித சுத்தமதை தவறாமல் செய்திடு
மணியான தூய்மையால் மண்ணுலகை மாற்றிடு

வீட்டினது சுத்தமென வீதியை கூட்டிடு
நாட்டையே நலமாக்க நல்லதை விதைத்திடு

சுத்தமிலா இடந்தோறும் சுகாதாரம் பெருக்கிடு
பத்தில்லா சூழலாக்க பார்முழுதும் பாடுபடு

வீட்டுகொரு கழிப்பறை வேண்டுமென கட்டிடு
காட்டின்மர வளங்களை கண்டிப்பாய் காத்திடு

பசுமையின் போர்வையால் பாரினை மூடிடு
விசும்பின்நீர் துளியாலே வேளாண்மை செய்திடு

நெரிசலே இல்லாத நகரத்தை நிறுவிடு
வரிசையில் காத்திருப்பு வழக்கத்தை மாற்றிடு

நல்லதொரு குடிநீரை நலிந்தோர்க்கும் கொடுத்திடு
இல்லாமை இல்லாமல் ஏழ்மையை ஒழித்திடு

சுற்றுப்புற தூய்மையை சுகமாக்கி வைத்திடு
பெற்றிடும் விழிப்பாலே பிணிகளை தடுத்திடு

மருத்துவ முழுமையால் மக்களை காத்திடு
ஒருவனுக்கு ஒருத்தியென உறவாலே வாழ்ந்திடு

ஊட்டங்கள் நிறைவான உணவையே உண்டிடு
வாட்டத்தை விலக்கிட விளையாட்டைக் கொண்டிடு

பன்பாடு மாறாத பாதையில் சென்றிடு
முன்னோர்கள் காட்டிய முறைமையை காத்திடு

இயற்கை உறவோடு  இசைவாக வாழ்ந்திடு
உயரும் சுகத்தாலே  உலகையே மாற்றிடு

-கவிஞர் ப.கண்ணன்சேகர், திமிரி செல் :9894976159

News

Read Previous

முதுகுளத்தூர் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம்

Read Next

முதுகுளத்தூரில் காங்கிரஸ் போட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *