இவர்கள் சந்தித்தால்

Vinkmag ad

சுற்றுசூழல் சீர்கேடும் – தீர்வுகளும்”, –
எனது சில கவிதை வரிகள் இங்கே தங்கள் பரிசீலனைக்காக……
வாய்ப்பு  அளித்த அனைவர்க்கும்   நன்றி ….

=================================================
                              
இவர்கள் சந்தித்தால்  –   (பூமித்தாய் – தமிழ்த்தாய்)

தமக்கையாம் தமிழ்த்தாயிடம்
தஞ்சமடைந்தாள்  பூமித்தாய்-
துயர்நீக்க  வழிகேட்டு
உரைத்தது உரைத்தபடி :-

நான் அருந்துவது தொழிற்சாலை கழிவுநீர்
நிலத்தின் உணவு ஜீரணிக்கவியலா நெகிழி  (பிளாஸ்டிக்)
உயிர்  வாழ சுவாசிப்பதோ கரியமிலவளியை
உலக வெதும்பலால் உறக்கமும் உதிர்ந்தது

வருனனை வரவழைப்பதும் வழியனுப்புவதும் – என்னில்
வளர்பவரே வகுத்தால் சீறுவரே இயற்கையன்னை
ஐம்பூதங்களுடன் மோதி குறுக்கிடலின் தொடக்கம்-
ஏழறிவுடைய புதிய ஜீவராசிகளின் ஜனனம்

என்மேணி மிளிர வீதிகளிலிட்ட குப்பைத்தொட்டிகள்
நாணிச் சிரிக்கின்றன பொலிவுடன் பளபளப்பாக
குப்பை குவிந்தழுகுது அதன்   சுற்றுப்புறத்திலே
எதை  எங்கு இடவேண்டுமென அறியாதவர்களால்

வயது  கூடினும்  வலிமை  குறையாது
வாஞ்சையுடன் என் மக்களை சுமக்கின்றேனே
வலி என்னுடல் கண்டாலும் கவலையில்லை
வளர்கின்ற என் பிள்ளைகாள் நலிவுறலாமோ?

இதோ  என் நிலை கேளாய் அக்கா –
இருதயமாம்  காற்று மண்டலத்திலே ஓட்டை
இருண்டவீடாய்ப் போனது  என் வாழ்க்கை
இனி  குடும்பவிளக்கு ஏற்றிட வருபவருமுண்டோ?

பூமித்தாய் அழுதாள்இளகியது   அவள்மனம்;
புத்துயிராய் பூரிப்படைய தேற்றினாள் தமிழ்த்தாய்

வீட்டின் அகமும் புறமும் இருகண்களென
ஐந்தில் கற்பித்தால் தொடர்ந்திடுமே ஐம்பதுகளிலும்
காணும் இடங்களை  தானும்  கழிப்பிடமாக்காது
கால்நடை உயிர்களையும் கட்டுகோப்பில் வைத்திடுவர்

மெய்ஞானம் காட்டும் மாசுகட்டுபாட்டை கடைபிடித்தால்
மெய்யான வளர்ச்சி விஞ்ஞானத்தாலும் விளைந்திடுமே
பச்சை நிறம் சுற்றுசூழலின் அடையாளமாம்
இச்சை உண்டாம் மரம்நட்டு மாசுகளைந்திட

பாரிலுள்ள நாடுகள் ஐக்கியமாகி ஆலோசிப்பர்
மாற்று எரிசக்தி மூலத்தில் முதலிடுவர்
வேற்று கிரகத்தில் குடிபுகல முனைவர்
பெற்ற உன்னையும் கைவிடாது தாங்குவர்

கண்திறந்தது பூமித்தாய்க்கு; தமிழ்த்தாய்க்கு நன்றிகூறி
கதிரவனைச்  சுற்றிவலம்வர நகர்ந்து நடைகட்டினாள்.

============================================================

நன்றி,
ஸ்வேதா மீ.ரா.கோபால்.

பின்குறிப்பு:
1.நெகிழி  – பிளாஸ்டிக்
2.சுவாசிப்பது  கரியமிலவளி  – கார்பன்,கந்தகம்,நைட்ரஜன் போன்ற உலோகங்களிலிருந்து வந்த அமிலங்களால் காற்று மண்டலம் புகையடைந்து மாசடைந்தது – காற்று  மண்டல ஓட்டை நிகழ்ந்தது
3. உலக வெதும்பல் – பூமியின் வெப்பம் அதிகரித்து சூரியவீச்சு அதிகம் ஆகுவது  – பகல் நீள்வதற்கு ஒப்பாம்.
4. ஏழறிவு  ஜீவராசிகள்  –  சுற்றுசூழல் கேடு – நம் உடல் நோய்வாய்படுவது மட்டுமல்லாமல்  புதிய புதிரான உயிரினங்கள் தோன்றவும் வழி வகுக்குமாம்.
5.கந்தகம்,நைட்ரஜன் போன்றவற்றால் மழை நிறுத்துவதோ ,அமில மழை வரவழைப்பதோ இயற்கை பெருந்சீற்றதை விளைவிக்கும்.
6.அதிக மரங்கள் நட்டால் கரியமிலவளியை மரம் உரிந்து  மாசை குறைக்குமாம்.

தகவல் – வலைப்பக்கங்கள்
நன்றி,
ஸ்வேதா மீ.ரா.கோபால்.

News

Read Previous

என்ன கொண்டு வந்தோம்?

Read Next

முதியோர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *