இல்லம் கட்டும் இளஞ்சிட்டே

Vinkmag ad

இல்லம் கட்டும் இளஞ்சிட்டே
—————————————-

இலைகளைப் பின்னிப்பின்னி இனிய இல்லம் கட்டும் இளம் சிட்டே
இலைகளை இணைத்தது போல் உன்
இனங்களை பின்னி இணைப்பாயோ

மூங்கில் இழை கொண்டு
மூக்கில் நூல் கோர்த்து
முட்டி முட்டி நீ செய்த உன்
முயற்சி தான் உன் இல்லமோ

யாரிடம் நீ கற்றாய் தையற்கலையை
யார் தந்தார் உனக்கு இந்த அறிவை
யாம்தாம் அறிவாளி என்றுருந்தோம்
யாவரையும் மிஞ்ச நீ எங்கு கற்றாய்

முட்டை இட்டாய் அடை காத்தாய்
முழு குஞ்சு வெளிவரும் வரை
பொறுமை எனும் வேள்வி நோற்றாய்
பொன் குஞ்சுகளை பரிசாய் பெற்றாய்

தினம் தினம் கூட்டை சுத்தம் செய்தாய்
திக்கெற்றும் சுற்றி தீண் கொணர்ந்தாய்
உருண்டை பிடித்து ஊருக்கெல்லாம் உண்ண கொடுத்த எம் தாய்மார் உணர்வை நினைக்கச் செய்தாய்

இத்தனை செய்தாய் ஆனால் குஞ்சு
இறக்கை முளைத்ததும் பறந்ததே
இதை மனிதனிடம் கற்று கொண்டதோ
இயற்கையின் நியதி இதுதானோ

எல்லோருக்கும் தாய்மை பொதுவானது
எங்களின் தாய்மை அதில் சிறந்தது
இரத்தத்தை பாலாய் சுரந்து
இனிய பண்பை பாகாய் குலைத்து
இதயகூட்டில் பாசம் பொழிவாள் தாய்

எங்கெல்லாமோ நீ அலைந்து
எடுத்து வரும் புழு பூச்சிகளை
இலைகூட்டில் குஞ்சுக்கு தருவாய்
இரண்டும் ஒன்றாகிடுமா நீயே சொல்

ஞானத்தின் இருப்பிடம் அல்லாஹ்
ஞானிகளை மிஞ்சும் அந்த அறிவு
ஞானத்தை உனக்கு தந்தவனை நீ
ஞாலம் உள்ளளவும் நினைந்து வாழ்

மனிதர்களை நம்பி வாழாதே
மாறு செய்வதே அவர்கள் பிழைப்பு
மரத்தை வெட்டி காட்டை அழித்தால்
மாற்று இலைக்கு எங்கே செல்வாய்

எல்லோர்க்கும் நன்மை செய்யும்
எல்லாம் வல்ல நாயன் அவனை
என்னாளும் நினைவில் கொண்டு
என்றும் நன்றி செலுத்தி வாழ்

மு. முகமது யூசுப் உடன்குடி

News

Read Previous

இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆலோசனை கூட்டம்

Read Next

இனி எங்கள் ஆட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *