இலக்கு

Vinkmag ad

இலக்கு..

தொடுக்கும் கணைக்கும் இலக்கது வேண்டும் எனில்

நடக்கும் வாழ்க்கைக்கு இலக்கு வேண்டாமா?

எடுக்கின்ற பணிதனை முடிப்பது எப்போது

என்கின்ற கணக்கைத்தான் இலக்கு என்கின்றோம்!

நடப்பது நடக்கட்டும் என்று கால்கள் நடந்தால்

நாம் எங்கே சேர்கிறோம் என்பதில் நிச்சயமில்லை!

படிப்பது முதலாய் பள்ளித்தேர்வுகள் அனைத்திலும்

இருப்பது இலக்கு .. அடைவது திறமை!!

வாழ்க்கை முழுவதும் வருகின்ற இலக்குகள்

நமக்குள் நாமே வகுத்திடும் புள்ளிகள்!

புள்ளிகள் இல்லா கோலங்களில்லை..

ஒவ்வொரு புள்ளியும் உன்வழிகாட்டும்!

வெற்றியை நோக்கி விரையும் புரவிகள்

எட்டிப் பறிக்கும் இலக்கினைக் காட்டுங்கள்!

கவிதைமொழியில் இலக்கைத் தொடுவோம்!

கன்னித்தமிழில் கவிதை புனைவோம்!

தமிழ்த்தேர் இதழில் இடம்பெறுவோம்!

‘இலக்கு’ என்பது உந்தன் பார்வையில்..

எடுத்துச் சொல்லவே வருக கவிதையே!

அடுத்தத் தலைப்பு   இலக்கு..

கவிதைகள்  வந்து சேர வேண்டிய நாள்:  20.10.2014

மின்னஞ்சல் முகவரிகள் :

 superstarzia@gmail.com   and

 thamizhnadhi2014@gmail.com

 

News

Read Previous

இந்திய தேசியச் சின்னங்கள்

Read Next

2014 புதுச்சேரி உத்தமம் மாநாட்டில் வலைப்பதிவுகளுக்குப் பரிசு

Leave a Reply

Your email address will not be published.