இன்று நீங்கள் இருந்திருந்தால்?

Vinkmag ad

இன்று நீங்கள் இருந்திருந்தால்?

என் செல்போனுக்குள் சில ஆயிரம் செல்பிக்கள் உங்களோடு இருந்திருக்கும்..

என் முதல் சம்பளத்தில் வாங்கித் தந்த சட்டைக்கு பதினொரு வயதாயிருக்கும்…

அம்மாவின் பக்கத்தில் உள்ள வெற்றிடம் நிச்சயம் நிறைந்திருக்கும்…

வழுக்கையின் அழகை என் மகள்களும் தொட்டு உணர்ந்திருப்பார்கள்…

தொப்பை இல்லாத என் அப்பாவை அவர்களிடம் காட்டி பெருமை பட்டிருப்பேன்…

அரசியல் வரலாற்றை உங்களை கேட்டே அறிந்திருப்போம்…

அதிமுக,திமுகவின் அடுத்த அசைவுகளை முன்பே தெரிந்திருப்போம்..

அஜீத்தின் அடுத்த படத்தை பற்றி அதிகமாக அலசியிருப்போம்…

அதி நவீன ஸ்மார்ட் போன் உங்களின் விரலைப் பிடித்திருக்கும்…

நீதிக் கதைக்கு நான் கூகுளைத் தேடும் அவல நிலை இருந்திருக்காது..

வாட்சப்,பேஸ்புக்கில் உங்களுக்கு ஒரு அக்கௌன்ட் இருந்திருக்கும்..

என் கவிதைகளுக்கும்,கிறுக்கல்களுக்கும் முதல் லைக் வந்திருக்கும்…

பாஸ்போர்ட்,ஆதார் அட்டையில் உங்கள் முகம் விழுந்திருக்கும்..

பாப்பாக்கள் இருவருக்கும் தமிழ் படிக்க தெரிந்திருக்கும்…

வீடுக்காபியில் குறைந்த அளவே இனிப்பிருக்கும்…

தைத்திருநாளில் குறைந்தது சர்க்கரைப் பொங்கலாவது இனித்திருக்கும்….

 

 

 

அன்புடன்,

சௌமியா விமல்

News

Read Previous

ஜல்லிக்கட்டுக் காளையின் அறைகூவல்!

Read Next

Multilingual Helpline in India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *