ஆகலாம் கலாம் ஆக ஆகலாம்

Vinkmag ad

போதவிழ்ந்து புன்சிரிக்கும் போதெழுந்த பூமணம்
மோதுதென்றல் மீதமர முன்னுதற்போல் உன்மனம்
ஓதமண்ணின் உட்புறத்தில் ஓடிவிட்டாய் நீயிலா
யாதுமிங்குக் கண்ணிருடன் யாத்திரையாய் ஆகலாம்

நீலவண்ண வானதிர நீவளர்த்த சாதனை
கோலவண்ண பூமியிலே கோத்திருக்கும் போதனை
ஞாலவண்ண மாணவரும் நானிலத்தில் வேதனை
காலமுன்னை கூப்பிடவே காலமென ஆகலாம்
கானுலவும் ராமநாத காற்றினிலே வீசிடும்
வானுலவும் ஆவியது வந்துவந்து பேசிடும்
தானுலவும் பாதையினைச் சார்ந்திருந்தால் ஆ..கலாம் 
ஊன்முழுதும் நீநிறைந்தால் உன்புகழாய் ஆகலாம் !

–அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

News

Read Previous

இந்தியை ஏற்பது இழிவல்ல!

Read Next

அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published.