அரசே ! இது நியாயமா ?.

Vinkmag ad
அரசே ! இது நியாயமா ?.
ஊஹான் அளித்த கொரோனாவினால் 
ஊரடங்கை  அறிவித்தன அரசுகள் . 
கடைகள் எதுவும் திறந்திடவில்லை 
காய்கறி சந்தை செயல்படவில்லை  
பள்ளி கல்லூரிகள் துவங்கவில்லை 
போக்குவரத்தும் துவங்கவில்லை .
அலுவலகங்கள் செயல்படவில்லை .
ஆலயங்களும் திறந்திடவில்லை . 
 அத்தியாவசிய பொருட்கள்  பட்டியலில் 

அரக்க மதுவை அரசினர் சேர்த்தார் 
மதுக்கடை மட்டும் திறந்தது அரசு .
மதுபிரியர்களுக்கு மகத்தான பரிசு. 
வாழ்வாதாரத்திற்கு ஆயிரம் கொடுத்து 
அதனை மதுவிற்கு செலவிடவைத்து 
போட்ட முதலை திரும்ப எடுக்க 
விட்டதைப்பிடிக்க இது சூதாட்டமா 
வருமானம் ஒன்றே குறிக்கோளாக 
அவமான உணர்வு சிறிதுமின்றி 
குடிக்க மதுவைக் கொடுக்கும் அரசு 
குடிமக்களுக்கா ? , குடிமகன்களுக்கா ?  
பேய்கள் அரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் 
பாரதி சொன்னது பலிக்குது இன்று .  
குமுறலுடன் , 
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 

News

Read Previous

அண்ணாகண்ணன் யோசனைகள்

Read Next

மனம் என்னும் மாமருந்து

Leave a Reply

Your email address will not be published.