அம்மி குழவி

Vinkmag ad

அம்மி குழவி

*****

அம்மியும் குழவியும்
அம்மாவின் தோழியர்
விம்மி விம்மி
அழுது புரண்டிடினும்
அம்மா இன்றில்லை
தோழியரே துணையெமக்கு
சும்மா முடங்கினும்
சுகமே காண்பதற்கு

அந்தக் காலம்
ஏழையர் குடிசை
அம்மி சத்தம்
கேட்க்கும் காலம்
அந்தி சாயும்
மாலை ஒன்றே
அன்றையர்அறிந்த
அனுபவம் அன்றோ

அம்மிச் சத்தம்
கேட்க்கும் வரை
அன்றைய உணவு
நிச்சியம் இல்லை
அனுதாபம் காண
எண்ணமும் இல்லை
அனுபவித்த ஏழ்மை
அருவியானதே இன்று
தொட்டு வணங்கும்
பாத மலர்களாகி
விட்டு விலகா
உறவே அம்மிக்குழவி
நட்டநடு வீட்டிலே
நான் வணங்கும்
மட்டில்லா அருள்தரும்
தெய்வமும் ஆனதே
🙏
*********
மைசூர் இரா.கர்ணன்
28 .04 .2020

News

Read Previous

புனித ரமலானே… வருக வருக!

Read Next

புனித ரமலான் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *