அண்ணா

Vinkmag ad

“அண்ணா … அண்ணா…”

 

வெற்றிலையின் காவிபடி  பல்லும் – மேலே

வெறும் வார்த்தை சிந்தாத உதடும்

வற்றாத இளமை சொல்லும் மீசை – என்றும்

மங்காத சோதி எனும் நுதலும் – கண்டோர்

அறிஞர்க்கும் அறிஞரிவர் என்னும் வண்ணம்

அளந்தளந்து நயத்தோடு பேசும் பேச்சும்

உருவாகி வந்துற்ற நிலையிற் றோன்றும்

உயர் குணத்தார்; படையினிலே முன்னிற் கின்றார்!

 

குன்றாத மனவளத்தான்; கவிதைச் செல்வன்

குறைவுபடா எழுத்தாளன்; அறிவுத் தோட்டம்

அன்றாடம் ‘விடுதலை’யில் வரைந்த சொல்லால்

அறிவுலகப் பாதையிலோர் புதுமை கண்டோன்;

திண்டோளும் மாங்கனியை வகிந்தாற் போலச்

சிவந்துவரும் புன்னகையும் வாலி பர்முன்

நின்றோடும் காதலிபோல்  தவழும் பேச்சும்

நிறைவேந்தன் ‘துரை’ என்றார்!  அண்ணா என்றார்!

 

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் தொகுதி  1 & 2 நூலில் இடம்பெற்றுள்ள கவிதையிது..

 

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் உங்களோடு பகிர்வு…

News

Read Previous

சிந்திக்க மறந்த “சீவலப்பேரி பாண்டி”நெப்போலியன்!

Read Next

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *