கல்வி

Vinkmag ad

ahilகல்வி

 

—- சுபையிர் அஹில் முஹம்மத் மௌலவி –  இலங்கை ——–

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தனது வாழ்க்கையில் கற்கின்ற அனுவபபாடங்கள் வாழ்க்கை பாடங்களை கல்வி என்று சொல்லலாம்.
“கற்பவனாக இரு கற்றுக் கொடுப்பவனாக இரு கற்பவனுக்கு உதவுபவனாக இரு நான்காம் மனிதனாக இருந்து விடாதே என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒவ்வொரு மனிதனும் அது ஆணாகினும் பெண்ணாகினும் கற்பது கடைமையாகும்.
கல்வி க்கு வயது தராதரம் இல்லை.
சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட ஓர் பொக்கிஷமே கல்வி யெனும் அழியா செல்வமாகும்.
கற்பவனே உலகில் சிறந்தவனாக வாழ்கிறான்
. ஓர் விவசாயி தனது விளைச்சலை சரியாக பெற வேண்டும் என்றால் அவன் விவசாயம் பற்றிகற்க வேண்டும்.அதபோல் வியாபாரி தனது வியாபாரத்தில் இலாபம் கான அதை பற்றி கற்க வேண்டும்.
ஓர் ஆசான் மாணவர்களை வளமாக்க தனது மாணவர்களை கல்விமான்கள் ஆக்க கற்கவேண்டும். மாணவன் தனது வாழ்வைவளமாக்க தனது பெறுபேற்றை நலவாக்க கற்க வேண்டும்.பெற்றோர்கள் தனது பிள்ளைகளை சிறந்த பிரஜையாக்க  கற்க வேண்டும்.
குடும்பம் தனது வாழ்க்கையை செலழிப்பாக்க கற்க வேண்டும்.
கற்பதென்பது வெறுமெனே புத்தக கல்வி  மட்டுமல்லாமல் தனது அனுபவ பாடங்களையும் தான் குறிப்பிடுகிறேன்.
கல்வி நாம் தான் தேடிச் செல்ல வேண்டும் அது தன்னை தேடி வராது.
பல மேதைகள் தனது வாழ்க்கை பாடத்தையே கல்வியாக விட்டு சென்றுள்ளார்கள்.
அவர்கள் தேடிச் சென்ற கல்வி பயணங்களே மிக பெரிய கல்வி புதையல்களாக இருக்கிறது.
ஆறறவு மானிடனுக்கும் ஐந்தறிவு மிருகங்களுக்கும் பிரித்தறியும் கல்வியே வித்தியாசத்தை உணர்த்துகிறது.
“ஓதியவனுக்கு ஒலுங்கையெல்லாம் சோறு என்பார்கள்.”
அதற்கிணங்க கல்வியை நாம் தேடினால் மற்றவைகள் அனைத்து தன்னைதேடிவரும்.
கல்வி க்காக தனது பெருவிரலை குருதட்சனையாக கொடுத்த மாமனிதன் கதையையும் வரலாறு கூறுகிறது.
அப்படி பட்ட இன்றியமையாத ஒன்றாக கல்வி திகழ்கிறது.
 கல்வி கற்ற வேளைகளில் தான் உண்ட உணவின் வேப்பெண்ணெய் கசப்பை அறியாத மேதையும் வாழ்ந்துள்ளார் என்பது சரித்திரம்
எத்தனையோ மனிதர்கள் கல்விக்கான தனது வாழ்நாள் முழுவதும் அற்பணித்துள்ளார்கள்.
அப்படி பட்ட கல்வியை நாம் கற்காமல் பாராமுகமாக இருப்போமா ராவ் எம்மைவிட கைசேதவாதி வேறுயாரும் கிடையாது.
அரசன் தான் ஆளும் மண்ணிலே உயர்தவனாக இருப்பான் ஆனால் கற்றவர் சென்ற இடமெல்லாம் உயர்வடைவான் அவன் செல்லுமிடமெல்லாம் வாசல் திறந்து வரவேற்கபடுவான்.
அப்படி பட்ட உண்ணதமான வாழ்க்கையை கல்வி எமக்கு பெற்றுத்தரும்.
மொழிகளை கற்பவன் ஊமையாக இருக்க மாட்டான்.
தான் வாழ வேண்டிய வழிகளை கற்றவன் வழிதவறமாட்டான்.
எமது வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் கல்வி எமக்கு பல வித துணைகளை செய்கிறது அதன் துணை இல்லாமல் எம் வாழ்வு ஆரோக்கியமாக மாறாது.
கல்வி யே எம் வாழ்வை முழு வாழ்வாக மாற்றுகிறது.
ஆகையால் நாம் அதற்காக என்ன கைம்மாறு செய்தோம். கற்ற வழி வாழ்வதே நாம் அதற்கு செய்யும் கைமாறு ஆகும்.
அது எம்மை வலுவுட்ட துணை செய்யும் ஒழுக்கம் ஓங்க வாழ வேண்டும்.
 எமது வாழ்வை ஒழுக்கமான வாழ்வாக வாழ வேண்டும் ஒழுக்கம் இல்லாத கல்வி எமக்கு பிரயோசனமளிக்காது.
எனவே அரிது அரிது மானிடானாய் பிறப்பதறிது அப்படி பட்ட அரிய பிரவியாகிய எம்மை அகிலம் அறிய செய்யும் கல்விக்காக எமது மானிட பிறவியை சமர்ப்பணமாக்கும்  கல்வி கற்று அதன் படி ஒழுகுவோம்.
     “கல் அதன் வழி நில்”
நன்றி.
சுபையிர் அஹில் முஹம்மத் மௌலவி இலங்கை.

News

Read Previous

பாலைவன சிங்கம் உமர் முக்தார்

Read Next

கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *